'பைக், செல்போன் தான் முக்கியம் என...' '3 மாசம் ஆன பெத்த குழந்தைய...' - கல் நெஞ்சம் கொண்ட தந்தை செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் 3 மாத குழந்தையை விற்று செல்போன் மற்றும் பைக் வாங்கிய தந்தையை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (29.08.2020) அன்று மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.
பெங்களூருவில் பிறந்த 3 மாத குழந்தை ஒன்று சொந்த தந்தையின் மூலம் கர்நாடகா சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள தினகல் கிராமத்தில், குழந்தை இல்லாத தம்பதிக்கு சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். பண்ணை தொழிலாளியான 3 மாத குழந்தையின் தந்தை குழந்தையை விற்ற பணத்தில் 15,000 ரூபாய்க்கு செல்போன் மற்றும் 50,000 ரூபாய்க்கு பைக்கும் வாங்கியுள்ளார்.
மேலும் குழந்தை பிறந்த மருத்துவமனையின் உதவியுடனே 3 மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த உடனே அவரின் தந்தை குழந்தையை விற்பதற்கு முயற்சி எடுத்ததாகவும், அதையடுத்து விழிப்புடன் இருந்த மருத்துவமனை அதிகாரிகளின் உதவியுடன் தற்போது குழந்தை மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக குழந்தையின் சத்தம் கேட்காததால் சந்தேகமடைந்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியுள்ளனர்.
மேலும் தன் கணவரின் செயலை வெளியே சொன்னால் தன்னை கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாக குழந்தையின் தாய் கூறியுள்ளார். தற்போது மீட்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...
- சுஷாந்த் சிங் வழக்கில் 'பகீர்' திருப்பம்!.. 'என்னோட மகன கொஞ்சம் கொஞ்சமா'... நொறுங்கிப்போன தந்தை... பரபரப்பு வாக்குமூலம்!
- 'வழக்கம்' போல் 'காலையில்' நடமாடிய மக்கள்!.. 'புளியமர' கிளையில் கண்ட 'அதிர்ச்சி' காட்சி!
- VIDEO: 'பிறந்து' 8 வாரம் கூட ஆகல!.. பச்ச 'குழந்தை' செய்ற வேலையா இது? ஆச்சரியத்தில் பெற்றோர்.. வைரல் வீடியோ!
- “ஹலோ.. ஹலோ..?!!”.. திடீரென, அமைதியான மகளின் குரல்.. மீண்டும் வந்த ‘அதிர்ச்சி’ போன் கால்.. ‘பயங்கர’ அலறல் சத்தம்...! - சிறுவன் கண் முன்னே தாய்க்கு நடந்த கோரம்!
- 'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்...! 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...!
- கொரோனா ‘பணிகளுக்காக’ பம்பரமாய் சுற்றிய பீலா ராஜேஷ் குடும்பத்தில் ‘இப்போது’ இப்படி ஒரு சோகம்!
- 'நாங்க வேணும்ன்னு கொலை பண்ணல'... 'அவர் என்ன செஞ்சாரு தெரியுமா'?... அதிரவைத்த 'திருநங்கைகளின்' வாக்குமூலம்!
- “இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
- ”அந்த செல்போனை ஒரு நிமிஷம் இப்படி கொடுங்க!.. இனி எந்த அப்பாவும்.. இப்படி பண்ணக் கூடாது!”.. செல்ல மகள் செய்த படுபயங்கர காரியம்.. சும்மா தீயாய் பரவும் வீடியோ!