ஐயோ, நம்ம வீடியோ 'பார்ன் சைட்'ல இருக்கு டா.. யாருடா இப்படி பண்ணினது? கண்ணீரில் காதல் ஜோடி.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை ஆபாச இணையத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம்:

பொதுவாக ஒரு ஹோட்டலில் தங்க செல்வோர் தாங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறையை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து கொள்வார்கள். ஆனால், இந்த நவீன காலத்தில் ஒரு ஊசி அளவு கேமரா வைத்து அனைத்தையும் படம்பிடித்து விடுகின்றனர். அதோடு காதலியுடன், மனைவியுடன் செல்பவர்கள் இரு முறைக்கு பத்து முறை கூட சரிபார்க்க வேண்டிய நிலைமை தான் உள்ளது. இல்லையென்றால் என்ன ஆகும் என பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய காதல் ஜோடி:

பெங்களூரு, ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவர் பிபிஓ (BPO) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலியுடன் பெங்களுருவில் இருக்கும் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியுள்ளார்.

இன்டர்நெட்டில் அப்லோட் செய்த மர்ம நபர்கள்:

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி அந்த இளைஞர் காவல் நிலையம் சென்று ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது காதலியும் சில வாரங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அதை வீடியோ பதிவு செய்து சிலர் இணையத்தில் அப்லோட் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

போலீஸ் தரப்பு அளித்த விளக்கம்:

மேலும், அந்த வீடியோவில் தங்களின் முகம் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் நபரின் மார்பு பகுதியில் உள்ள அடையாளத்தை வைத்து, அந்த இளைஞர் அது தாம் தான் என்று புகார் அளித்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அதே வீடியோ மற்ற சில ஆபாச இணைய தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டு எடுத்துள்ளார்கள்:

அதோடு இந்த வீடியோ பல்வேறு ஷாட்களாக எடிட் செய்யப்பட்டு அப்லோட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை திட்டமிட்டே எடுத்துள்ளனர் எனவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். ஹோட்டலில் தங்கிய நபருக்கு நடந்த இந்த சம்பவம் பேரிடியாக அவருக்கே திரும்பியுள்ளது. இதன்காரணமாக இந்த காதல் ஜோடி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

BENGALURU, VIDEO, PORN, பெங்களூரு, வீடியோ, ஆபாச வலைத்தளம், காத ஜோடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்