'கொரோனா இருக்குனு கூட்டிட்டு போனாங்க'... 'இளம்பெண்ணை தேடிச்சென்ற கணவருக்கு'... 'அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி'... 'பரபரப்பு சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி ஆம்புலன்சில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறி, கடந்த 3ஆம் தேதி 28 வயதான பெண் ஒருவருடைய வீட்டிற்கு முழுகவச உடைகளை அணிந்து கொண்டு 4 பேர் வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் மீண்டும் அப்பகுதிக்கு ஆம்புலன்சில் வந்த 2 பேர் அந்தப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும், செல்போனை உடன் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் ஆம்புலன்சில் வந்த 2 பேர் கூறியதால் அந்தப் பெண் செல்போனை எடுத்துக்கொள்ளாமல் சென்றுள்ளார். அதன்பின்னர் அடுத்த நாள் அந்தப் பெண்ணின் உடல்நிலை குறித்து அறிய அவருடைய கணவர் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
பொம்மனஹள்ளியில் இருந்து எந்த ஒரு பெண்ணும் கடந்த 4 நாட்களாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறிய மருத்துவமனை நிர்வாகத்தினர், மாநகராட்சி சார்பில் பொம்மனஹள்ளியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை எனவும், பொம்மனஹள்ளியில் கொரோனா பாதித்தவர்களை தங்களுடைய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி மாநகராட்சியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை எனவும் கூறியுள்ளனர்.
அதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன அந்தப் பெண்ணின் கணவர் வேறு சில மருத்துவமனைகளில் விசாரித்த போதும், மனைவி பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி மர்மநபர்கள், அந்த பெண்ணை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழ, இதுகுறித்து அவர் பொம்மனஹள்ளி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாயமான அந்த பெண்ணை தேடிவருகின்றனர்.
இதுபற்றி பேசியுள்ள பொம்மனஹள்ளி மாநகராட்சி அதிகாரி ஒருவர், "பொம்மனஹள்ளியில் மாநகராட்சி சார்பில் வீடு, வீடாக சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. மாநகராட்சி சார்பில் கொரோனா பாதித்த பெண்ணை ஆம்புலன்சில் அழைத்து சென்றால், சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். ஆம்புலன்ஸ் டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறுந்தகவலில் இடம் பெற்றிருக்கும். ஆம்புலன்ஸ் டிரைவர் அல்லது மாநகராட்சி ஊழியர்கள், கொரோனா பாதித்த பெண்ணையும், ஆம்புலன்சையும் புகைப்படம் பிடித்து அனுப்பி வைப்பார்கள். அதுபோன்ற எந்த ஒரு புகைப்படமும் வரவில்லை. போலீசார் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் பெண் காணாமல் போனது குறித்து விசாரிக்கப்பட்டு, பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'ரஷ்யா கண்டுபிடிச்ச தடுப்பூசிய...' 'நாங்க வாங்குறோம்...' - அறிவிப்பை வெளியிட்ட இரு நாடுகள்...!
- 'எனக்கு அம்மாவ பாக்கணும்'... 'ஏங்கிப்போன பிஞ்சு மனசு'...'ஒர்க் பிரஷரால் தம்பதி எடுத்த முடிவு'... 19 மாத பாச போராட்டம்!
- 'இதுக்கெல்லாம் டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேண்டியதில்ல!'.. கொரோனா பரிசோதனையில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!
- 'எல்லாமே பக்கா... விரைவில் நல்ல செய்தி'!.. இந்தியாவுடன் கைக்கோர்க்கும் ரஷ்யா!.. நிறுவனங்கள் கடும் போட்டி!
- "பள்ளிகளை திறக்கலாம்.. 'இந்த' வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம்!".. தேதி, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த அரசு!
- 'இப்படியா வெண்ணை திரண்டு வரும்போது பானை உடையணும்??'.. உலக நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த 'கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்!'.. பரபரப்பு காரணம்!
- 'இந்தியர்கள் உட்பட 13,000 பேர் வேலை செய்யத் தடை'... 'கொரோனா அச்சுறுத்தலால்'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள நாடு!'...
- சுஷாந்த் சிங் தங்கை மீது நடிகை ரியா 'பாலியல்' புகார்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. பதறவைக்கும் பின்னணி!
- 'அசாதாரணமான வரலாற்று சோதனையை கடந்துட்டோம்!'.. 'நம்ம நடவடிக்கைதான் பல்லாயிரக்கணக்கான உலக உயிர்களை காப்பாத்தியிருக்கு!'.. சீன அதிபர் புளங்காகிதம்!