'உயிர பணயம் வைச்சு'... 'ரிஸ்க் எடுக்குறாங்க'... 'அவங்க விதியை மீறினா'... 'நீங்க தான் கம்பி எண்ணனும்’... போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஸ்விகி டெலிவலி பாய்ஸ் சாலை விதிகளை மீறினால் ஸ்விகி நிறுவனத்தின் மீது நடவடிக்கை பாயும் என பெங்களூரு நகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ ஆன்லைன் உணவு நிறுவனத்தின் டெலிவரி பாய்ஸ் சாலை விதிகளை மீறுவதாக ட்விட்டரில் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு ஸ்விகி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் டெலிவரி பாய்ஸ் சாலை விதிகளை மீறுவதில்லை என்றும், அப்படி மீறுவதைப் பார்த்தால், தங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் என்று கூறியிருந்தது. இதையடுத்து, இதற்கு ட்விட்டரில் ஸ்விகி நிறுவனத்திற்கு பெங்களூரு நகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் ஐபிஎஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதில், ‘குறைவான நேரத்தில் உணவை கொண்டு சேர்க்க வேண்டிய நிர்பந்தத்தில், உங்கள் டெலிவரி பாய்ஸ் விதிகளை மீறுவதாகவும், தினம் தினம் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு தங்களை விடுவிக்கக் கெஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தமுறை நிச்சயம் உங்கள் ஸ்விகி பாய்ஸ் சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தால், அதற்குப் பின்னாலும் நிச்சயம் உங்கள் நிறுவனம்தான் இருக்கும். அடுத்த முறை விதிகளை மீறினால் ஸ்விக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
அதிவேக டெலிவரி என்ற பெயரில் பீட்சா நிறுவனங்கள் தங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். காலக்கெடுவுக்குள் வீட்டிற்கு உணவு வராவிட்டால் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு மக்கள் இதய மற்றவர்களா?" எனவும் பதிவிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ‘30 நிமிடங்களில் உணவு டெலிவரி இல்லையென்றால் இலவசம் என்ற அதிவேக டெலிவரி கொள்கையால், அனைத்து விதமான போக்குவரத்து விதிகளையும் மீறி, தங்களது உயிரை பணயம் வைத்து, கொண்டு வரும் பீட்சாவை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு மக்கள் இதய மற்றவர்களா? என்றும் அவர் கேட்டுள்ளார். இதனால், 30 நிமிடங்கள் என்பதை 40 நிமிடங்களாக மாற்றுமாறு, பீட்சா நிறுவனங்களை நான் கேட்டு வருகிறேன்’ என்றும் அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தற்போது விவாத பொருளாக மாறியிருந்தாலும், விதிகளை மீறுவது தவறு என ட்விட்டரில் கருத்துக்கள் வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மக்களே பெரிய நன்றி'... 'இனிமேல் 'உபர் ஈட்ஸ்'யில் ஆர்டர் பண்ண முடியாது'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- “இனி இப்படி பண்ணிதான் பாருங்களேன்!”.. “சாலைகளில் QR ஸ்கேனர் Code-உடன் கண்ணாடி!”.. “கலக்கும்” சிட்டி!
- ஒரு நாளைக்கு 3 ‘சோப்’... ஒரு ‘டஜன்’ பிளாஸ்டிக் பை... 10 மணி நேரக் ‘குளியல்’... ‘விநோத’ பிரச்சனையால் ‘ஐடி’ ஊழியருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
- 'விஷத்தை' குடித்த 5 மாத கர்ப்பிணி... 'இறந்து' பிறந்த குழந்தை... அடுத்து 'நடந்த' பரிதாபம்!
- ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு... இவங்களுக்கு எல்லாம் அனுமதி இல்ல!
- ‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- நாட்டிலேயே 'சம்பளத்தை' அதிகமா அள்ளிக்கொடுக்குற 'சிட்டி' இதுதான்... எவ்ளோ தெரியுமா?
- 'பொள்ளாச்சி' விவகாரத்தால்... வட மாநிலங்களை பின்னுக்குத்தள்ளிய... 'தமிழக' நகரம்!
- 'யாரெல்லாம் இத பண்ணி இருக்கீங்க'...'சொமேட்டோ கேட்ட கேள்வி'...பிரித்து மேய்ந்த நமது 'புள்ளிங்கோ'!
- 'PEPPER SPRAY அடிக்க கூடாதுனு சட்டம் ஒன்னும் இல்லயே?.. 'பெண்களே தயாரிச்சுக்கலாம்!'.. 'எப்படி?' ஐபிஎஸ் அதிகாரி! வீடியோ!