பீட்சா வந்து குவிஞ்சிட்டே இருக்கு...! 'சாமி சத்தியமா நான் ஆர்டர் பண்ணலங்க...' இதெல்லாம் யாரோட வேலை...? 'குழம்பி தவித்த பெண்...' ஃபேஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் அருகே எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சமீபகாலமாக தினமும் பீட்சா வந்துள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிற்கு 'உங்களை காதலிக்கிறேன், உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.
ஆனால், சம்பந்தப்பட்ட பெண் அவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதனையடுத்து, அந்த பெண்ணிற்கு தினமும் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் பீட்சா வந்துள்ளது.
முதலில் அவரது வீட்டிற்கு பீட்சா எடுத்து கொண்டு வந்தப்போது, தான் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியும், அவர் பெயரில் ஆர்டர் செய்திருப்பதால் அவரே பணம் கொடுத்து பீட்சாவை பெற்றுக் கொண்டார்.
இதேபோல் தினமும் பீட்சா வரவே குழப்பத்தில் இருந்துள்ளார். மீண்டும் அந்த இளைஞர் சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதில், 'நான் தான் உங்கள் பெயரில் பீட்சா ஆர்டர் செய்து அனுப்பி வைக்கிறேன். நீங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து உங்கள் பெயரில் பீட்சாவை ஆர்டர் செய்து தொல்லை கொடுப்பேன்' என அனுப்பியுள்ளார்.
அதோடு, ' கோரமங்களாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்களை நியமித்து, உங்களை நான் தினமும் கண்காணித்து வருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் மர்மநபர் மீது எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தன் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எமனாக மாறிய கூல் டிரிங்க்ஸ்!.. சல்லடை போட்டு அலசிய அதிகாரிகள்!.. மர்ம மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- VIDEO: 'ஏய்! இங்க வா... அடிக்கலாம் மாட்டேன்...' - அட்ரஸ் கேக்குற மாதிரி அருகே வந்து.. இளைஞர் பார்த்த வேலை... பதிலுக்கு, தரமான சம்பவம் செய்துவிட்ட இளம்பெண்...!
- நாங்க 'அத' பண்ணலன்னா... எங்களால 'ஹேப்பியா' இருக்க முடியாது...! - வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு 'பிரபல பீட்சா' நிறுவனம் அளித்துள்ள வாக்குறுதி...!
- கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா...? தயவு செய்து எனக்கு ஒரு 'நியாயம்' சொல்லுங்க...! 'திருமண ஊர்வலத்தில் மணமகள் செய்த காரியம்...' - உடைந்து நொறுங்கி போன மணமகன்...!
- 'மொபைல் போனில் வந்த ஒரு டெக்ஸ்ட் மெசேஜ்...' 'உள்ள இருந்த கண்டென்ட் படிச்சதும் வந்த ஆசை...' - எல்லாம் முடிச்சிட்டு செக் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
- 'எதுக்கு கரண்ட், கேஸ்லாம் வேஸ்ட் பண்ணனும்...' 'அது யாருமே யூஸ் பண்ணாம சும்மா தானே கெடக்கு...' - பீட்சா ரெடி பண்ண கிச்சன 'எங்க' போய் வச்சிருக்காரு பாருங்க...!
- 'ஹலோ சென்னை, நாங்க வரோம், தட்டி தூக்குறோம்'... 'RCB ஜெர்சியை போட்டு இன்ஸ்டாவில் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல வீரர்'... உற்சாகத்தில் கோலி!
- 'இந்தியாவின் 'ஐடி' தலைநகருக்கு வந்துள்ள சோதனை'... 'அடுத்து என்ன நடக்குமோ'... அச்சத்தில் மக்கள்!
- ‘நடுவானில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி’!.. ‘அய்யோ என்ன பண்றதுன்னே தெரியலையே’.. கடவுள் மாதிரி வந்த ஒரு பயணி..!
- ‘நாங்க என்ன ஆர்டர் பண்ணோம்... நீங்க என்ன டெலிவரி பண்ணிருக்கீங்க’!.. ‘எங்க குடும்பமே மன உளைச்சல்ல இருக்கோம்’.. ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உணவகம் மீது வழக்கு தொடர்ந்த பெண்..!