பைக் டாக்ஸியில் நம்பி ஏறிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.? தென்னிந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த சம்பவம் ஒன்று தென்னிந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Advertising
>
Advertising

முந்தைய காலங்களில் செயலிகள் எதுவும் இல்லாமல் நேரடியாக ஆட்டோ, கார்களை மக்கள் புக் செய்து பயணத்துக்கனா ரெய்டுகளை மேற்கொண்டனர். அதன் பிறகு குறிப்பிட்ட சேலைகள் மூலம் டாக்ஸி புக் பண்ணும் வசதி வந்துவிட்டது. இதேபோல் டாக்ஸியில் செல்வதற்கு அதிக செலவாகலாம், அதிக நேரம் எடுக்கலாம் என்கிற சூழல் உருவானபோது பைக் டாக்ஸிகள் வரத்தொடங்கின.

மிக குறைந்த செலவுகளில், விரைவான நேரத்தில் டிராபிக் உள்ளிட்ட விஷயங்களை கடந்து பைக்கில் சென்று விட்டு அதற்கான தொகையை பைக் ரைடரிடம் கொடுத்து விட முடியும். செயலிகள் மூலம் இந்த பைக்கர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சென்றடைகின்றனர். பெரும்பாலும் இந்த பைக் டாக்ஸிகளை பெண்கள் புக் பண்ணுவது குறைவு தான் என்றாலும், துணிச்சலான பெண்கள் பலரும் இப்படியான பைக் டாக்ஸிகளை புக் பண்ணுகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பைக் டாக்ஸி ஒன்றை புக் செய்து இருக்கிறார். அப்போது பைக்கில் வந்த அந்த நபர் இந்த பெண் ஏதோ போதையில் நிதானமற்று இருப்பதாக உணர்ந்ததை அடுத்து இடையில், அப்பெண் கேட்ட பொருள் ஏதோ ஒன்றை வாங்கி கொடுப்பதாக சொல்லிவிட்டு தம்முடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு இந்த பைக் ரைடரின் நண்பர்களும் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பைக் ரைடரும் அவருடைய இரண்டு நண்பர்களும் இணைந்து இந்த பெண்ணை சீரழித்து இருக்கின்றனர்.

பின்னர் அந்த அறையில் இருந்து தப்பித்து வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன அந்த இளம் பெண், தான் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் மூலம் உணர்ந்ததை தொடர்ந்து, போலீசாருக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் எலக்ட்ரிக் பைக்கில் வந்த குறிப்பிட்ட அந்த பைக் ரைடர், அவருடைய நண்பர், அந்த வீட்டில் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த இவர்களுடைய இன்னொரு நண்பர் மற்றும் அந்த வீட்டில் இருந்த இன்னொரு பெண் ஒருவரும் என இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாகி வருகிறது.

BENGALURU, BIKE TAXI, BIKER, BIKE TAXI RIDER, BIKE RIDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்