4வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த விமான பணிப்பெண்..! லிவ்விங் டுகெதரில் இருந்தபோது சோகம்.. பெங்களூரை அதிரவைத்த சம்பவம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் காதலனுடன் சண்டையிட்ட இளம் பெண் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தை அதிர்வடைய செய்துள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read |  "பிக்பாஸ் விக்ரமனின் பரபரப்பு Post .. வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை கொண்டு வருவதில் இவ்வளவு இருக்கா?"..  கௌசர் பாய்க் EXCLUSIVE பேட்டி!

நள்ளிரவில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் விமான பணிப்பெண் பலியாகி இருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் அர்ச்சனா திமன். 28 வயதான இவர் சர்வதேச விமான நிலையத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த சூழ்நிலையில், ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

சாப்ஃட்வேர் இன்ஜினியரான அந்த இளைஞர் கர்நாடகாவில் இருக்கும் பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சூழ்நிலையில், இருவருக்குமான டேட்டிங் ஆப் மூலமாக பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இவர்களுக்கு இடையில் சிறு சிறு சண்டைகளும் பிரச்சினைகளும் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில்தான் பெங்களூருவின் கோரமங்களாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள இவர்கள் வெள்ளிக்கிழமை இரவு தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மீண்டும் எடுத்து திரும்பியதாகவும் ஆனால் நள்ளிரவு நேரத்தில் இவர்களுக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டதாகவும் இதனை தொடர்ந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து அர்ச்சனா திமென் விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அர்ச்சனாவின் காதலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அர்ச்சனா மாடியில் இருந்து கீழே குதித்தது விபத்து என அவரது காதலர் கூறும் நிலையில், இது விபத்தா இல்லையா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Also Read | நீலகிரி டூ ஆஸ்கார்.! இந்தியாவுக்கு சமர்ப்பித்த ஆவணப்பட இயக்குநர்.. யார் இந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்.?

ARCHANA DHIMAN, BENGALURU AIR HOSTESS

மற்ற செய்திகள்