ரேஷன் உணவுப் பொருட்கள் இனி வீட்டுக்கே.. எப்போ இருந்து?.. முதல்வர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து ரேஷன் உணவுப் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் அதிரடியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த, மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றார். தான் முதலமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து எல்லா செய்திகளிலும் பரபரப்பூட்டும் வகையில் அதிரடி முடிவுகளையும் திருப்பங்களையும் உருவாக்கி வருகிறார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.

அந்த வகையில் இந்தியாவில் வரலாற்றில் இல்லாத அளவில், ஆந்திராவில் ஒவ்வொரு சாதியினத்தவருக்குமான உரிமைக்குரலாக அவர்களின் பிரதிநிதிகளாக 5 பேரை துணை முதலமைச்சர் ஆக்கும் திட்டத்தை அதிரடியாக செயல்படுத்தினார். அதன்படி ஆதிதிராவிடர் நலன், பழங்குடி இனத்தவர் நலன்,  சிறுபான்மையினர் நலன் உள்ளிட்டவற்றிற்காக 5 துணை முதலமைச்சர்களை தன்னுடைய 25 பேர் கொண்ட கேபினட் அமைச்சரவையில் இடம் பெறச் செய்தார்.

இந்த 25 அமைச்சர்களுடன் மிகச் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆலோசனை செய்து அந்த ஆலோசனையின் முடிவின்படி வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தும் பொதுமக்களின் வீட்டிற்கேச் சென்று விநியோகிக்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாகவும், அது போக அந்த மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தை அரசே ஏற்று நடத்துவது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ANDHRAPRADESH, JAGANMOHANREDDY, RATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்