"இதுக்கு மேலயும் அவ தாங்கிக்க மாட்டா.." யாசகம் செய்து சேர்த்த பணத்தில்.. கணவர் கொடுத்த அன்பு பரிசு..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப் பிரதேச மாநிலத்தில், யாசகம் செய்து வந்த நபர் ஒருவர், தனது மனைவிக்காக செய்த செயல் ஒன்று, பலரையும் நெகிழ செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தன்னுடைய குருவின் இறுதி ஊர்வலத்துல கலந்துக்கிட்ட கிம் ஜாங் உன்..வட கொரியாவின் சூப்பர் ஹீரோவாக கருதப்படும் ஹியோன் சோல் ஹே.. யாருப்பா இவரு?

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹு. இவரது இடுப்பின் கீழ் பகுதி சரியான செயல்பாடு இல்லாமல் இருந்துள்ளது.

இதனால், இவர் அப்பகுதியில் யாசகம் செய்து அதில் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அதே போல, சந்தோஷிற்கு முன்னி என்ற மனைவியும் உள்ளார்.

தள்ளுவண்டி மூலம் யாசகம்

கணவரால் நடக்க முடியாது என்பதால், அவரிடம் இருந்த தள்ளுவண்டி ஒன்றில், சந்தோஷை உட்கார வைத்து முன்னி தள்ளிக் கொண்டு சென்ற படி, சிந்த்வாரா பகுதியிலுள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் பொது இடங்களில் இருவரும் சேர்ந்து யாசகம் செய்து வந்துள்ளனர். கணவரால் தள்ளு வண்டியை பெடல் செய்ய முடியாது என்பதால், முழு நேரமும் மனைவி முன்னி தான் கணவரை உட்கார வைத்துக் கொண்டு, வண்டியை தள்ளிச் செல்வார். இருவருமாக நாள் ஒன்றுக்கு, சுமார் 300 முதல் 400 ரூபாய் வரை யாசகம் பெற்றும் வந்துள்ளனர்.

கணவர் எடுத்த முடிவு

இதனிடையே, வண்டியை தள்ளி தள்ளி முன்னிக்கு முதுகு வலியே வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தங்களின் வயிற்று பிழைப்புக்கு பெரிய காரணமாக இருக்கும் மனைவியின் நிலையைக் கண்டு, சந்தோஷ் வேதனை கொண்டுள்ளார். இதனால், மனைவியின் துயரைத் துடைக்க வேண்டும் என்பதற்காக அசத்தலான முடிவு ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக, தான் யாசகம் செய்து சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து, 90,000 ரூபாயை எடுத்து மொபட் ஒன்றை வாங்கியுள்ளார். சந்தோஷுக்கு ஏற்ற வகையில், இந்த வண்டி இருப்பதால், அவரே மனைவியை அமர வைத்து, அப்பகுதி எங்கும் வலம் வருகிறார்.

மனைவியின் வலியை மாற்ற, கணவர் செய்த செயல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "ஒரே பிரசவத்துல 4 குழந்தை'ங்க.. அதுலயும்" கர்நாடக தம்பதிக்கு நடந்த அதிர்ஷ்டம்.. ஆச்சரியத்தில் பாராட்டும் மக்கள்

BEGGAR, WIFE, கணவர், பரிசு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்