'நா ஒரு இந்து இல்லங்குறதுனால இப்படியா?'.. ஆர்டரை கேன்சல் செய்தவரின் கமெண்ட்.. 'ஸ்க்ரீன் ஷாட்' அம்பலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில் ஸொமாட்டோ டெலிவரி பாய் ஒரு ‘இந்து அல்லாதவர்’ என்பதால், அவர் கொண்டுவந்த உணவை மத்தியபிரதேசத்தை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் நிராகரித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

அதுமட்டுமல்லாமல், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஸொமாட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், உணவுக்கு மதம் இல்லை; தங்கள் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு மதப் பாகுபாடு இல்லை என்று தெரிவித்ததை அடுத்து விஷயம் சூடுபிடித்தது. இதனை அடுத்து, அமித் சுக்லாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும்; இதேபோல் ஸொமாட்டோவின் ட்வீட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஹேஷ்டேகுகள் பறந்தன.

எனினும் அமித் சுக்லாவோ, தான் ஷெர்வான் மாதத்தில் இருப்பதால், புலால் மறுக்கும் ஒருவரே தனக்கு உணவு டெலிவரி செய்ய வேண்டும் என்று எண்ணி, வேறு ஊழியரை கேட்டதாகவும், ஆனால் அவ்வாறான காரணத்துக்காக் ரைடரை மாற்றியனுப்ப முடியாது என்று ஸொமாட்டோ தரப்பில் கூறியதாகவும், அதனால், தான் ஆர்டரை கேன்சல் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சர்ச்சைக்குப் பிறகு, தற்போது மீண்டும் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் டஸ்லிமா நஸ்ரின், கடந்த 2013-ஆம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்ட தனது புகைப்படம் ஒன்றுக்கு அமித் சுக்லா பதிவிட்ட தகாத கமெண்ட்டின் ஸ்க்ரீன் ஷாட்டினை ஷேர் செய்து, அதிரடியான கேள்வி ஒன்றையும் கேட்டுள்ளார்.

அதன்படி, டஸ்லிமா நஸ்ரினின் அங்கங்களை தகாத முறையில் வர்ணித்து ஆபாசமாக, அமித் சுக்லா கமெண்ட் பதிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நஸ்ரின், ‘இந்து-அல்லாத உணவு டெலிவரி ஊழியர் கொண்டுவந்த ஆர்டரை கேன்சல் செய்த அந்த நபர், நானும் ஒரு இந்து-அல்லாத பெண்மணி என்பதால்தான்,  என்னையும் இவ்வளவு தரக்குறைவாக பேசினாரா?’ என்று கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார்.

ZOMATOCONTROVERSY, TASLIMANASREEN, NONHINDU, AMITSHUKLA

மற்ற செய்திகள்