புதுச்சேரி பியூட்டி பார்லர்ல இது புதுசாக இருக்கே.. பறந்த அலார்ட்.. தேடி போன போலீஸ்.. திகைத்து போன அழகிகள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுச்சேரி: அழகுநிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்தது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார்  5 அழகிகளை மீட்டனர்.

புதுச்சேரி பியூட்டி பார்லர்ல இது புதுசாக இருக்கே.. பறந்த அலார்ட்.. தேடி போன போலீஸ்.. திகைத்து போன அழகிகள்
Advertising
>
Advertising

மசாஜ் சென்டர்கள் என்றாலே ஒரு காலத்தில் எங்கேயாவது ஒரு இடத்தில் தகுதி வாய்ந்த நபர்களை வைத்து அல்லது நன்கு மசாஜ் செய்யக்கூடிய அனுபவம் உள்ள நபர்கள் மட்டுமே தொழில் செய்து வந்தனர். காலப்போக்கில் மசாஜ் சென்டர்களில் அது பாலியல் தொழில் நடக்கும் இடமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு மசாஜ் சென்டர்கள் அதிகரிப்பும்,  அதில் நடக்கும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

Beauty parlor sex workers arrested in Pondicherry

நாட்டிலேயே பாலியல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் முதல் மாநிலம் என்ற அவப் பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. குறிப்பாக வேலை தேடி கொண்டிருக்கும்  அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் பியூட்டி பார்லர் என்ற பெயரில் புதுச்சேரியில் பாலியல் தொழில் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மசாஜ் சென்டர், அழகுநிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் கொடி கட்டி பறக்கிறது. இதுதொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  புதுச்சேரியில் உள்ள மசாஜ் சென்டரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விருந்துக்கு அழைத்து.. வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்..! சேலத்தில் பரபரப்பு..!


அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள துளிப்ஸ் அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் பாபுஜி தலைமையில் போலீசார் அந்த அழகுநிலையத்தில் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகுநிலைய உரிமையாளர் முத்துப்பிள்ளைபாளையத்தை சேர்ந்த ஜெசிமா (35), மயிலாடுதுறையை சேர்ந்த ராஜகோபால் (63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அழகிகள் 5 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தடுப்பூசி போட மறுத்த இளைஞர்... மருத்துவமனை நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு.... தந்தையின் பரிதவிப்பு!

BEAUTY PARLOR, PONDICHERRY, ARREST, WOMAN, அழகுநிலையம், புதுச்சேரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்