'ஐபிஎல் ஸ்பான்சர் விவோ தான்...' 'அதுல எந்த மாற்றமும் இல்ல...' 'சீனப் பொருட்களை புறக்கணிக்க வலுக்கும் குரல்களுக்கு மத்தியில்...' பிசிசிஐ பொருளாளர் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய சீன எல்லையில் நடைபெற்று வரும் பதற்றமான சூழல் ஐபிஎல் கிரிக்கெட் வரை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே இந்திய சீனா எல்லைகளில் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சீனா ராணுவத்தால் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் நேற்று இந்திய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா அமைதியையே விரும்புவதாகவும், யாராவது சீண்டினால் அதற்குரிய தக்க பதிலையும் அளிக்கும் என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவில் சீன ஆப்களையும், சீனப் பொருட்களையும் புறக்கணிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ இருக்கிறது.

தற்போது சீனாவின் நடவடிக்கையால் இந்தியா அதிருப்தியடைந்துள்ள சூழலில் விவோ நிறுவனம் மேலும் ஸ்பான்சராக நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறும் போது, இதுபற்றி இப்போதைக்கு நாங்கள் எதுவும் முடிவெடுக்கவில்லை. சீன நிறுவனங்களுக்கு உதவுதல் என்பதற்கும் சீன நிறுவனத்திடமிருந்து பயன்பெறுவதற்குமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய மக்களிடம் இருந்து சீனா நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது, அதில் ஒரு பங்கை பிசிசிஐக்கு ஐபிஎல் ஸ்பான்சர்களாகச் செலுத்துகிறார்கள். ஸ்பான்சராக இருக்கும் விவோவிடமிருந்து பெறும் பணத்திற்கு பிசிசிஐ 42% வரி செலுத்துகிறது. எப்படி பார்த்தாலும் இது நம் நாட்டுக்கு சாதகமானது தானே தவிர சீனாவுக்குச் சாதகமானதல்ல, எனவே விவோ ஐபிஎல் ஸ்பான்சராக தொடரும்' என துமால் தெரிவித்தார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.2,199 கோடியை விவோ நிறுவனத்திடம் இருந்து ஐபிஎல் ஸ்பான்சர் தொகையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்