பிப்ரவரி மாதத்தில், நாட்டின் அனைத்து வங்கிகளும் 8 நாட்கள் மூடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2 சனிக்கிழமைகளில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட உள்ளன. பிப்ரவரி 21ம் தேதி மகா சிவராத்திரி என்பதால், அன்றும் வங்கிகள் மூடப்படும்.
பிப்ரவரி மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் பின்வருமாறு:
பிப்ரவரி 8 - மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை
பிப்ரவரி 9 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 16 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 21 - மகா சிவராத்திரி
பிப்ரவரி 22 - மாதத்தின் நான்காம் சனிக்கிழமை
பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை
மேற்குறிப்பிட்டுள்ள விடுமுறை நாட்கள், மத்திய அரசின் விடுமுறை நாட்கள் என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இவை பொருந்தும். அது தவிர, விடுமுறை தினங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடலாம். மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சிறப்பு விடுமுறை தினங்கள் இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளை அணுகி இந்த மாதத்தின் சிறப்பு விடுமுறை தினங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதத்தின் இரண்டு மற்றும் நான்காம் வார சனிக்கிழமைகள், அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வர்ற மாசம் 1ம் தேதி யாருக்கும் 'சம்பளம்' கிடைக்காது?... 'ஈ.எம்.ஐ.' கட்றவங்க எல்லாம் முன்னாடியே கட்டிடுங்க... ஏன் தெரியுமா?...
- "கும்கி படத்துல வர்ற கொம்பனா இருக்குமோ?!"... "600 பள்ளிகளுக்கு 'விடுமுறை' அளிக்கவைத்த அந்த யானை யார்?"...
- அடேங்கப்பா! ஜனவரில மட்டும் '16 நாள்' லீவாம்... எந்தெந்த தேதில.... 'பேங்க்' இருக்காதுன்னு தெரிஞ்சுக்கங்க!
- அரையாண்டு 'விடுமுறை' மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு... புதிய தேதி 'குறித்து' விரைவில் அறிவிப்பு?
- ‘தமிழகம்’ முழுவதும்... நாளை முதல் ‘கல்லூரிகளுக்கு’ தொடர் ‘விடுமுறை’.. உயர்கல்வித்துறை அறிவிப்பு...
- ஹேங் ஓவரா?... தாராளமா 'லீவ்' எடுத்துக்கங்க... இன்ப 'அதிர்ச்சியளித்த' நிறுவனம்!
- ‘தொடர்ந்து பெய்து வரும் கனமழை’... ‘இன்று எங்கெல்லாம்’... ‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’... தேர்வுகள் ஒத்திவைப்பு!
- ‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- ‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- 'காவிரி கரையோரம் வசிக்கும்'... '12 மாவட்ட மக்களுக்கு'... 'வெள்ள அபாய எச்சரிக்கை'!