வர்ற மாசம் 1ம் தேதி யாருக்கும் 'சம்பளம்' கிடைக்காது?... 'ஈ.எம்.ஐ.' கட்றவங்க எல்லாம் முன்னாடியே கட்டிடுங்க... ஏன் தெரியுமா?...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திட்டமிட்டபடி, வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி, புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர்.

அதன்படி, இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் 12.5 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே அளிக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. சமரசம் ஏற்படாததால்  இக்கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

எனவே, திட்டமிட்டபடி வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. பொதுத்துறை, தனியார்துறை, அயல்நாட்டு வங்கிகள் என எல்லா வங்கிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

BANK STRIKE, COMING 31ST, FEBRUARY, WAGE INCREASE

மற்ற செய்திகள்