கிராமப்புற வங்கி பணிகளுக்கான தேர்வுகளை, தமிழ் உள்பட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொதுவாக ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகிறன. இதனால் மற்ற மொழிகளில் பயின்றவர்களுக்கு அசெளகர்யமான சூழ்நிலையும் வங்கித் தேர்வை கையாள்வதில் சிக்கலும் இருந்து வந்தன.
இந்நிலையில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி (RRB) வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ், தெலுங்கு, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்கு எளிமையாகவும் மற்றும் புரியும் விதமாகவும் இருக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பதவியேற்பு நிகழ்விலேயே அதகளம்'... 'கைதட்டலுக்கு நடுவே பதவியேற்ற ஒரே எம்.பி.'!
- 'ஃபெயில் ஆனது உன்னாலதான்.. ஃபீஸ் கட்டுறியா இல்ல அந்த ஃபோட்டோஸ எல்லாம்..'.. மிரட்டிய காதலன்.. காதலி அதிரடி!
- 'தேசிய அளவில் முதலிடம் பிடித்த கேரள மாணவி.. 2-ஆம் இடத்தில் சென்னை மாணவர்’.. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்!
- 'ஒரு போட்டோ இல்லாததால்'.. நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த மாணவர்.. நெகிழவைத்த காவலரின் செயல்!
- ‘இந்த டைம் தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ்நாட்லயே நீட் எக்ஸாம்’.. ஹால் டிக்கெட் பிழைதிருத்தும் கடைசி தேதி இதான்!
- ‘எந்த மாவட்டம் முதலிடம்?.. எந்த சைட்டில் பார்க்கலாம்’.. பரபரப்பான சூழலில் வெளியான +2 தேர்வு முடிவுகள்!
- 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்!
- மண்புழுவா.. குமாரசாமியா.. எடியூரப்பாவா..? - வைரலான பள்ளி வினாத்தாள்!
- ‘பேங்க் வேலை ஏதாச்சும் முடியாம இருக்கா?’.. கவலை வேண்டாம்.. இந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களும்..’
- பப்ஜிக்கு அடிமையான மாணவர்.. கல்லூரித்தேர்வில் செய்த பரபரப்பு காரியம்!