'இணைக்கப்பட்ட 3 வங்கிகள்...' 'மாறப்போகும் IFSC நம்பர்...' வேற என்ன மாற்றங்கள்...? - மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேனா மற்றும் விஜயா வங்கிகள் இணைந்த நிலையில் மார்ச் 1 முதல் IFSC code உள்ளிட்ட பல மாற்றங்கள் வரவிருப்பதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்தான முக்கிய விவரங்களை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த சில மாதங்களுக்கு முன் தேனா மற்றும் விஜயா வங்கிகள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைந்தன. அதன்காரணமாக விஜயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஆகியவற்றின் 3,898 வங்கிக் கிளைகளையும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தன்னுடன் இணைத்துள்ளது.
இந்நிலையில் இந்த மூன்றுவங்கிகளும் இணைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்கு எண், வாடிக்கையாளர் அடையாள எண், IFSC நம்பர் போன்ற பல்வேறு சந்தேகங்கள் உருவாகியிருக்கும்.
அதற்கு விடிவாக, மார்ச் 1ஆம் தேதி முதல் IFSC குறியீடு மாறும் என பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வங்கிக் கிளைகளின் IFSC குறியீடுகளை பிப்ரவரி 28 வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தவும், இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கி தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் IFSC நம்பர் குறித்த சந்தேகங்களுக்கு வாடிக்கையாளர்கள் 1800 258 1700 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைக்கலாம். அதேபோல, MIGR ஸ்பேஸ் XXXX என 8422009988 என்ற நம்பருக்கு எஸ் எம் எஸ் அனுப்பியும் தெரிந்துகொள்ளலாம். (இங்கு XXXX என்பது வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்கள்.)
மேலும் தேனா பேங்க் மற்றும் விஜயா பேங்க் வங்கிக் கிளைகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளாக மாற்றப்படும் எனவும், அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் code நம்பரும், வங்கிக் கிளை பெயரும் முகவரியும் மாற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தீனா பேங்க் மற்றும் விஜயா பேங்க் வாடிக்கையாளர்கள் இதற்கு முன் தாங்கள் பயன்படுத்திவந்த ஏடிஎம் கார்டுகளைப் எக்ஸ்பைரி ஆகும்வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளது.
குறிப்பாக இனி மூன்று வங்கிகளின் நெட் பேங்கிங் சேவைகளும் இனி https://www.bobibanking.com என்ற முகவரியில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மொபைல் பேங்கிங் சேவைகள் M-Connect Plus என்ற மொபைல் ஆப் மூலமாகக் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு நிமிஷத்துல கடன்.. ஆன்லைன்லயே பெறலாம்!' - ஆசை காட்டி பின்னால் ஆப்பு வைக்கும் 1,509 ஆப்ஸ்! ‘ரிசர்வ் வங்கியிடம் குவிந்த புகார்கள்!’.. பாயும் நடவடிக்கை!
- 'கண்ணாடி, சிசிடிவி கேமராவெல்லாம் ஒடச்சு'... 'இதுக்கா இத்தன ரணகளம்???'... 'விரைந்து வந்த போலீசார்'... 'விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்!!!...
- ‘ஏழை மக்களுக்கு உதவ’... ‘இத்தனை கோடிக்கு’... ‘தனது சொத்துக்களை அடமானம் வைத்த நடிகர் சோனு சூட்?’...
- VIDEO: Money Heist-ஐ மிஞ்சும் வங்கி கொள்ளை.. சாலை முழுவதும் ‘பணம்’.. கொத்துக் கொத்தாக அள்ளிய மக்கள்..!
- 'இனிமேல் பொறுக்க முடியாது'... 'கேஷ்பேக் கொடுப்பதை தயவு செஞ்சு தடுங்க மேடம்'... நிதி அமைச்சருக்கு பறந்த கடிதம்!
- நள்ளிரவு வங்கியில் அடித்த ‘அலாரம்’.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்.. அரியலூர் அருகே பரபரப்பு..!
- 'பெரிய தொழிலதிபர்கள் போல நடித்து... '3 வங்கிகளை' ஏமாற்றிய தம்பதி'!.. சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு... பக்கா டாக்குமென்ட்ஸ்!.. அதிர்ச்சி பின்னணி!
- ஏன் இந்த பணம் மட்டும் ‘டெபாசிட்’ ஆகல..? சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த ‘அடுத்த’ அதிர்ச்சி..!
- 'ஒரு காலத்தில கொடி கட்டி பறந்து... இன்னைக்கு இப்படி ஒரு நிலைமையா'?.. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பின்னணி!.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
- 63 போலி டெபிட் கார்டு.. 50 லட்சம் ரூபாய் பணம்... 'குடும்பமே சேர்ந்து கூட்டாக பார்த்த வேலை!'.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!