டிசம்பர் முடிய இன்னும் 10 நாட்களே… இதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை!




முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிசம்பர் மாதத்தின் கடைசி 10 நாட்களில் 6 நாட்கள் பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பண்டிகை நாட்கள் தொடர்ந்து வருவதால் கடந்த 2 மாதங்களாகவே வங்கிகளுக்கு அதிகப்படியான விடுமுறைகள் வந்துவிடுகின்றன.

Advertising
>
Advertising

அடுத்த 10 நாட்களுக்குள் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் அதற்குத் தகுந்து தங்களது வங்கி வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும். இந்த 6 நாட்களில் ஒரு நாள் அரசு விடுமுறை ஆக கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்குமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறைகள் சார்ந்த அறிவிப்புகள் அனைத்தும் மத்திய ரிசத் வங்கியின் சார்பில் வெளியிடப்படும். ஆனால், கிறிஸ்துமஸ் இரண்டாவது சனிக்கிழமை வருவதால் அது ஏற்கெனவே விடுமுறை நாள் தான். இதனால் டிசம்பர் மாதத்தில் மொத்த 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதில் 6 நாட்கள் முடிந்துவிட்டன. கடைசி 10 நாட்களில் மீதம் உள்ள 6 நாட்கள் விடுமுறைகள் உள்ளன.

வங்கி சென்று முடிக்கும் வேலைகள் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் வங்கிகளின் விடுமுறைகளை பட்டியலை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வங்கிகளுக்குப் பொதுவாகவே அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறைதான். இதுபோக, 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறைகள் ஆகும். இதில் பண்டிகைகள், திருவிழாக்கள், உள்ளூர் விழாக்கள் என அனைத்தும் விடுமுறைகள் ஆக வங்கிகளுக்கு அறிவிக்கப்படும்.

மாநிலங்கள் வாரியாகவும் வங்கிகளுக்கான விடுமுறைகள் மாறுபடும். சில மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிசம்பர் 24-ம் தேதி மற்றும் புத்தாண்டுக்கு முதல் நாளான டிசம்பர் 31-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடுவே 2 ஞாயிறுகள், 4-வது சனிக்கிழமை ஆகியன விடுமுறைகள் ஆக அமைந்துள்ளன.

BANK HOLIDAYS, SBI, INDIAN BANK, வங்கிகள், வங்கி விடுமுறை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்