'திடீரென மாயமான மனைவி'... 'கணவனின் Whatsappக்கு வந்த புகைப்படங்கள்'... 'ஒரே ஒரு டயலாக் தான்'... 3 குடும்பத்தை கதிகலங்க வைத்த பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எனக்கு யாருமே இல்லை என்ற ஒற்றை வசனத்தை வைத்து 3 குடும்பத்தைக் கதிகலங்க வைத்துள்ளார் பெண் ஒருவர்.

இந்திய மாநிலம் ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்தவர் சுனில் குமார். 29 வயது இளைஞரான இவருக்குத் திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகக் கூறி சுகாசினி என்பவர் அறிமுகமானர். இருவரும் முதலில் நண்பர்களாகப் பழகிய நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

தனக்கு என்று யாருமே இல்லை, நான் அன்புக்காக ஏங்குகிறேன் எனப் பல வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார் சுகாசினி. இதை எல்லாம் உண்மை என நம்பிய சுனில் குமார், உனக்கு யாரும் இல்லை எனக் கவலைப்படாதே, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன், எனக் கூறி சுகாசினியை திருமணம் செய்துள்ளார் சுனில் குமார். திருமணத்தின்போது, சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளைக் கொடுத்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதிலிருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி 6 லட்சம் ரூபாய் வரை சுனிலிடம் பணம் வாங்கியுள்ளார். மனைவி தானே கேட்கிறார் என சுனில் குமாரும் அந்த பணத்தைக் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் சுனிலின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், கடந்த 7ம் தேதி தங்கள் மகனிடம் இருந்து வாங்கிய பணத்தை என்ன செய்தாய் என சுகாசினியிடம் கேட்டுள்ளார்கள்.

இதையடுத்து சுகாசினி திடீரென மாயமானார். இதனால் பதறிப்போன சுனில், சுகாசினியின் ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சுகாசினி, நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து ஒரு மகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இதற்கிடையில், சுனில் குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி, தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தைத் தருவதாகவும், காவல்துறையை நாடினால் வீணாகப் பிரச்சினை வரும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகின்றது. அப்போது சுனில், வெங்கடேஷை திருமணம் செய்தது குறித்துக் கேட்டுள்ளார்.

அப்போது சுகாசினி, நீங்கள் என்ன கண்டுபிடிப்பது நானே சொல்கிறேன் என, வெங்கடேஷை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரைத் திருமணம் செய்ததாகக் கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் சுனிலின் செல்போனிற்கு அனுப்பி அதிர்ச்சியூட்டியுள்ளார் சுகாசினி. இதை எல்லாம் பார்த்து அதிர்ந்து போன சுனில், உடனடியாக திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், சுகாசினி 3 போரையும் வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து நகை பணத்துடன் மாயமானது தெரியவந்தது. அதே நேரத்தில் முதல் இரு கணவர்களுக்கும் ஆளுக்கொரு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு தப்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே இதே போல வேறு யாராவது சுகாசினியின் காதல் வலையில் சிக்கி வாழ்க்கை இழந்துள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்