சிகிச்சைக்காக சென்னை வந்த வங்கதேச பெண்.. விமானத்தில் திடீர் மரணம்.. பரபரப்பான சென்னை விமான நிலையம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வங்கதேசத்தில் இருந்து சென்னை வந்த பெண்மணி ஒருவர் திடீரென மரணமடைந்ததால் விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.

Advertising
>
Advertising

Also Read | திடீரென தரைமட்டமான அடுக்குமாடி கட்டிடம்.. பதறிப்போன மக்கள்.. வீடியோ..!

Images are subject to © copyright to their respective owners.

பயணம்

வங்கதேசத்தை சேர்ந்தவர் அபு. இவருடைய மனைவி குர்ஷிதா பேகம். அண்மையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் குர்ஷிதா பேகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அவருடைய கணவருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கிருக்கும் மருத்துவமனையில் தனது மனைவியை சேர்த்திருக்கிறார் அபு. ஆனால் அவருடைய உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனை தொடர்ந்து, இந்தியாவில் சிகிச்சை பெற இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற இந்தியாவுக்கு பயணித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

பரபரப்பு

இதனை தொடர்ந்து, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வர இருவரும் திட்டமிட்டிருக்கின்றனர். விமான பயணத்தின்போது திடீரென குர்ஷிதா பேகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அபு, விமான பணியாளர்களை அழைத்து நிலைமையை விளக்கியுள்ளார். இதன்படி விமானிக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர் உடனடியாக சென்னை விமான நிலையத்தின் கட்டுப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

சோகம்

இதனால், மருத்துவ குழு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தயார்படுத்தப்பட்டு இருந்திருக்கிறது. விமானம் தரையிறங்கிய பின்னர் உடனடியாக மருத்துவ குழு குர்ஷிதா பேகத்தை பரிசோதனை செய்தது. ஆனால், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே அவருடைய கணவர் அபு நொறுங்கிப்போனார். இதனால் சக பயணிகளும் பெரும் சோகமடைந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

விசாரணை

இதனையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மரணமடைந்த குர்ஷிதா பேகத்தின் உடலை கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்குக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரிவு 174ன்படி வழக்கு பதிவு செய்து போலீசார் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து சென்னை வரும் வழியில் பெண் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | முதுகில் ஆப்ரேஷன்.. தொடர் ஓய்வில் பும்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்னதான் ஆச்சு..?

FLIGHT, BANGLADESH, TRAVEL, FLIGHT TRAVEL, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்