'வேகமெடுக்கும் கொரோனா'... 'எங்களுக்கு வேற வழி தெரியல'... இந்தியாவுடனான எல்லை மூடப்பட்டது!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாகப் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.‌இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்டை நாடான வங்காள தேசம் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.‌ இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஏகே அப்துல் மோமன் கூறுகையில், ‘‘இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் விரைவான அதிகரிப்பு காரணமாக இந்தியாவுடனான எல்லையை நாளை (திங்கட்கிழமை) முதல் 2 வாரங்களுக்கு மூடுகிறோம்.

அதே சமயம் இரு நாடுகளுக்கிடையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்து அனுமதி வழங்கப்படும்’’ எனக் கூறியுள்ளார். முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்குக் கடந்த 14-ந் தேதி வங்காள தேச அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்