டெய்லி நைட் 'அவரு' ஆன்லைன்ல... 'கணவருடைய உண்மை முகத்தை கண்டறிந்த மனைவி...' - இப்படி பட்ட மனுஷனையா கல்யாணம் செய்தேன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு ஜெயநகர் பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவர் தன் கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

இதனை விசாரித்த நீதிமன்றம் பசவனகுடி மகளிர் போலீசாருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான சில மாதங்களிலேயே தன் கணவரின் உண்மையான முகத்தை தெரிந்துகொண்டதாக அப்பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கபட்ட பெண் உள்ளூர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 'திருமணம் முடிந்து சில நாட்களிலேயே என் கணவர் ஆபாச தளங்களுக்கு அடிமையாக இருப்பது தெரியவந்தது. தினமும் இரவு அவர் ஆன்லைனில் கால் கேர்ள்களுடன் அரட்டை அடிப்பார். அந்த பெண்களுக்காக பணத்தையும் செலவு செய்துள்ளார்.

அதோடு, பல ஆபாச இணையதளங்களுக்கு சந்தா செலுத்தி அந்த இணைய தளங்களை தினமும் பார்ப்பார். நான் என் கணவரின் பெற்றோருக்கு இதனை குறித்து தெரிவித்தேன். ஆனால், அவர்கள் என் கணவரை கண்டிக்கவில்லை.

எப்படியும் திருந்திவிடுவார் என நினைத்தேன், ஆனால், அவர் திருந்துவதாக தெரியவில்லை. என் கணவரின் இந்த  பழக்கத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை மிகவும் துன்புறுத்தினர். என்னால் வீட்டில் நல்ல உணவு கூட உண்ணமுடியாது. என் மாமனார் மாமியாரும் என் கணவருடன் சேர்ந்து என்னை துன்புறுத்தினர்.

என் கணவர் பெண்களுடன் பேச என் புகைப்படத்தை உபயோகித்து வந்துள்ளார். ஒருமுறை அவர் ஒரு மேட்ரிமோனியல் தளத்தில் தன்னுடைய விவரங்களை பதிவிட்டார், அதில் அவர் விவாகரத்து செய்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த பழக்கவழக்கங்களை நான் கண்டிப்பதால் எந்த குடும்ப நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்வதைத் தவிர்த்தனர்' என அந்தப் பெண் தனது மனுவில் குற்றம் சாட்டினார்.

BANGALORE, WIFE, HUSBAND, PORNOGRAPHIC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்