'கலவர' கும்பல் கிட்ட இருந்து தப்பிக்க... '3' மணி நேரமா சின்ன 'பாத்ரூம்'ல... ஒளிஞ்சிருந்த 'அஞ்சு' பேரு... குடும்பத்தை கலங்கடித்த 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் சில தினங்களுக்கு முன் பைரசந்திரா என்னும் பகுதியில் கலவரம் வெடித்தது.
ஒருவரின் ஃபேஸ்புக் பதிவின் காரணமாக இந்த வன்முறை நிகழ்ந்துள்ள நிலையில், மத ரீதியிலான அந்த சர்ச்சை பதிவால் கிழக்கு பெங்களூரின் பல பகுதிகள் சூறையாடப்பட்டன. பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டது. இந்நிலையில், நாகம்மா லே அவுட் பகுதியின் 7 வைத்து க்ராஸ் தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில் ராபின் என்பவர் வசித்து வருகிறார்.
இவர்களின் வீட்டின் மாடியில் தான் சர்ச்சைக்குரிய பதிவிட்ட நபர் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று, முகநூல் பதிவிட்ட நபரின் வீட்டை தாக்க நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் வருவதை ராபினின் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். அந்த கும்பல் வேக வேகமாக மாடி ஏறி வருவதைக் கண்ட ராபின் மற்றும் குடும்பத்தினர், வேக வேகமாக தங்களது வீட்டிலுள்ள சிறிய கழிவறையில் ஒளிந்து கொண்டது. ராபின், அவரது மனைவி மற்றும் தாயார், குழந்தைகள் உட்பட ஐந்து பேர் அந்த சிறிய பாத்ரூமில் ஒளிந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் அவர்கள் அங்கேயே ஒளிந்திருந்து தப்பித்துள்ளனர்.
அந்த கும்பல் ராபினின் மனைவியின் ஸ்கூட்டி மற்றும் அவரது உறவினரின் கார் ஒன்றையும் தீ வைத்துள்ளது. அதிக நேரம் பாத்ரூமில் இருந்ததால் ராபினின் மகனுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், ராபின் குடும்பத்தினரின் வாகனங்களை கலவர கும்பல் தீ வைத்த போது, ராபினின் மாமியார் வாகனத்தை தீ வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கலவர கும்பல், பேசிக் கொண்டிருந்தால் உன்னையும் சேர்த்து தீ வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வன்முறை.. தாக்குதல்.. உயிர் பலி.. துப்பாக்கிச் சூடு.. பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூரு!..144 தடை உத்தரவு! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோக்கள்!
- 'உங்க ஐடி வேலைய இழக்காம இருக்கணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணுங்க...' - இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரி அளிக்கும் தகவல்கள்...!
- 'நிறைய தடவ வார்னிங் கொடுத்தாச்சு...' 'இனி பொறுத்திட்டு சும்மாலாம் விட முடியாது...' 'வருத்தப்பட்ட மனைவி...' - கணவர் துணிந்து இறங்கி செய்த கொடூரம்...!
- 'ஐடி கம்பெனிகளில் உருவாகும் மிகப்பெரிய மாற்றங்கள்...' - வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஊழியர்களின் கருத்துக்கணிப்பு...!
- “எஸ்கேப் ஆன 3000 கொரோனா நோயாளிகள்!”.. ‘எப்படி தப்பிச்சாங்க?’.. ‘இதுதான் நடந்தது!’.. ‘உச்சகட்ட டென்ஷனில்’ மாநகராட்சி அதிகாரிகள்!
- தங்கக்கடத்தல்.. டிமிக்கி கொடுத்து வந்த கேரள அதிகாரி 'ஸ்வப்னா சுரேஷ்'.. பெங்களூரில் அதிரடி கைது!.. நடந்தது என்ன?
- “நியாயமாரே!”.. “பொழப்பே இத நம்பிதானே!”.. ‘ஜாயினிங் லெட்டருடன்’ காத்திருந்த ஐ.டி ஊழியர்களுக்கு வந்த ஷாக் மெயில்!
- தம்பி சூடா ஒரு 'டீ' ... ஆமா யாரு 'நீங்க'?... நான் 'கொரோனா' பேஷண்ட் பா... சுத்தி நின்னவங்க எல்லாம் 'தெறிச்சு' ஓடிட்டாங்க!
- “அதெல்லாம் பொய், வதந்தி... நம்பாதீங்க! அப்டிலாம் நாங்க சொல்லவே இல்ல!” - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம்!
- ''போலீசாரால் தாக்கப்பட்ட 19 வயது சிறுவன்...' 'ஹார்ட் அட்டேக்க்கில் மரணம்...' சாத்தன்குளம் சம்பவத்தை அடுத்து மற்றுமொரு சோகம்...!