காஸ்ட்லி காருக்காக 'அந்த' பேன்சி நம்பரை...! 'ரூ. 10.75 லட்சம் கொடுத்து வாங்கிருக்கார்...' - இவ்வளவு விலைக்கு ஏலம் போறது இதான் ஃபர்ஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம் பெங்களூரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் (20-10-2020) வாகன பதிவு பேன்சி எண்களுக்கான ஏலம் நடைபெற்றது. அதாவது KA01-MV என்று தொடங்கும் பேன்சி எண்களான 0001, 9999, 0009, 1111 உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது.

இந்த வாகன பதிவு எண்கள் இலகுரக வண்டிகளுக்கானவை ஆகும். முதலாவதாக 0001 என்ற பதிவு எண்ணை அதிகாரிகள் ஏலம் விட்டனர். அந்த எண்ணை பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான குமால் முஸ்தபா என்பவர் ரூ.10.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

அவர், புதிதாக விலை உயர்ந்த ஸ்மார்ட் கார் ஒன்றினை வாங்கி இருக்கிறார். அந்த ஸ்மார்ட் காரின் பதிவு எண் பேன்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் பதிவு எண்ணை ரூ.10.75 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூருவில் ஒரு பேன்சி வாகன பதிவு எண் அதிக விலைக்கு ஏலம் போய் இருப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல, 9999 என்ற பதிவு எண் ரூ.4.15 லட்சத்திற்கும், 0009 என்ற பதிவு எண் ரூ.3.75 லட்சத்திற்கும், 0999 என்ற பதிவு எண் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும், 0555 என்ற வாகன பதிவு எண் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் ஏலம் போயுள்ளது.

மொத்தம் 50 பேன்சி வாகன எண்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்ததாகவும், அவற்றில் 15 பேன்சி எண்களை வாகன ஓட்டிகள் ஏலம் எடுத்திருப்பதாகவும், இதன் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ரூ.29 லட்சத்து 55 ஆயிரம் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்