தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்!... பேட்ரோல் வண்டியில் உணவு விநியோகம்... இதயங்களை கொள்ளை கொண்ட காவலர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளா நிலையில், ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,23,413 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இதற்கிடையே, நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை உருவானது.
ஊரடங்கு அமலுக்கு வந்ததையொட்டி, நாடு முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பேரிடர் காலங்களில் போலீஸார் இறங்கி வந்து மக்களுக்கு உதவுவதை நாம் நேரடியாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தற்போது பெங்களூருவில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அப்பகுதி போலீஸார் உணவு வழங்கி உதவி செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
அன்றாடங் காட்சியாக, வீடின்றி சாலையோர நடைமேடைகளில் வசிக்கும் ஏராளமானோரின் வயிற்றுப் பசியைப் போக்கிவரும் காவல்துறையினருக்கு ஒரு ராயல் சல்யூட்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அலட்சியமா சுத்தாதீங்க'... 'ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன நடவடிக்கை'?... சென்னை காவல்துறை அதிரடி!
- கொரோனாவால் 'டேட்டிங்' ஆப்களில்... அலைமோதும் இளைஞர்கள்... 'அந்த' ஆப்-க்கு தான் மவுசு அதிகமாம்!
- ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய... 900 பேர் மீது வழக்குப்பதிவு!... காவல்துறை அதிரடி!
- 'ஒரே வாரத்துல' வேலைய 'மாத்திட்டாங்களே'... 'ஐயோ...!' 'டான்ஸ்' வேற ஆட சொல்வாங்க போல... 'ஸ்பெயினில்' மக்களை 'பாட்டு பாடி' மகிழ்விக்கும் 'போலீசார்'...
- ‘குழந்தைக்கு தடுப்பூசி போட போன நர்ஸ்’.. தாய் சொன்ன பகீர் தகவல்.. மதுரையை அதிரவைத்த மற்றொரு சம்பவம்..!
- வேலூரில் பயங்கரம்... 'காதலை' கண்டித்ததால் பெற்ற தாயை... 'லாரியில்' தள்ளிவிட்டு கொலை செய்த மகன்!
- குளிக்க போன 'பசங்கள' காணோமே... தேடிச்சென்ற தாய்க்கு 'அடுத்தடுத்து' காத்திருந்த அதிர்ச்சி... 'நடுங்க' வைத்த கொடூரம்!
- ‘ஏதாவது சிரமம் இருக்கான்னு கேட்டேன்’.. ‘ஒரு மருத்துவர் சொன்னார்’.. ‘என் கண்களில் கண்ணீர்..!’.. உருகிய அமைச்சர்..!
- என்னுடைய அந்த 'பழக்கம்' தான் காரணம்... 'தற்கொலை' செய்துகொண்ட இளம்தம்பதி... 'உருக்கமான' கடிதம் சிக்கியது!
- ‘கொரோனாவா? அதெல்லாம் ஆத்தா பாத்துக்குவா!’.. ‘வேப்பிலைத் தோரணத்துடன்’ சுற்றும் மாநகர பேருந்துகள்!