VIDEO: வேலை முடிச்சிட்டு வந்த ‘IT’ பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. சிக்கிய அக்கா கணவர்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது மனைவிக்கு தங்கை ஒருவர் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த சூழலில் மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொள்ள தேவராஜ் விரும்பியுள்ளார். இதுகுறித்து மனைவியின் தங்கையிடம் கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் திருமணத்துக்கு மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அப்பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொள்ள தேவராஜ் முடிவு செய்துள்ளார். அதன்படி தனது நண்பர்கள் இருவருடன் அப்பெண் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்திற்கு வெளியே காத்திருந்துள்ளனர். அப்பெண் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதை கவனித்த தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உடனே அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர்.
வழக்கமாக வேலை முடிந்து வீடு திரும்பும் தனது மகள் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது அம்மா, உடன் வேலை பார்ப்பவர்களிடம் போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், அப்பெண் வேலை முடிந்து சீக்கிரமாகவே சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அம்மா, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கார் ஒன்றில் இளம்பெண்ணை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காரின் நம்பரை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே வாகன சோதனை ஈடுபட்டபோது சம்பந்தப்பட்ட காரை போலீசார் பிடித்துள்ளனர்.
அப்போது அக்காவின் கணவர் தேவராஜ்தான் அவரது தங்கையை கடத்தியது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தடுப்பூசி போட மறுத்த இளைஞர்... மருத்துவமனை நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு.... தந்தையின் பரிதவிப்பு!
தொடர்புடைய செய்திகள்
- உங்க கூட டேட்டிங் வரப்போற பொண்ணு இப்போ கூப்பிடுவாங்க.. கொஞ்ச நேரத்தில் வந்த போன்கால்.. மனம் உடைந்த சாப்ட்வேர் என்ஜினியர்
- காதலனுடன் சென்று சொத்தில் பங்கு கேட்ட மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்.. அலறியடித்து ஓடிய காதலன்..!
- மலக்குடலில் வச்சு எடுத்திட்டு போனா தான் சிக்க மாட்டோம்.. கடத்தல் காரர்கள் போட்ட பிளான்.. ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
- பெங்களூருவில் 426 பேரின் உயிரை காத்த 42 வயது ஹீரோ.. 3000 அடி உயரம்.. கடைசி நேரத்தில் பறந்த மெசேஜ்
- மனைவியுடன் தவறான உறவு.. தட்டிக்கேட்ட கணவன்.. கடைசியில் நடந்த கொடூரம்..!
- ஜஸ்ட் மிஸ்! பெங்களூரில் மோத இருந்த இரு விமானங்கள்.. கடைசி நொடியில் எடுத்த முடிவு.. வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
- பேஸ்புக் மூலம் உருவான 'நட்பு'.. காணாமல் போன சிறுமி.. அந்த பொண்ணு கிட்ட பேசுனது ஆம்பளயே இல்ல.. ட்விஸ்ட் அடித்த விவகாரம்
- 42 வயது டீச்சருக்கு உள்ளாடையை பரிசாக கொடுத்த வீட்டு ஓனர்... போட்டு வந்து காட்ட சொல்லி டார்ச்சர்... பதிலுக்கு பெண் செய்த காரியம்!
- அய்யா, என் மகன காணோம்.. அழுது புலம்பிய பெற்றோர்.. போன் சிக்னல் வெச்சு டிரேஸ் பண்ணி பாத்தப்போ தான் பெரிய ட்விஸ்ட்டே
- "உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." தனியாக மாடிக்கு அழைத்த கணவர்.. நம்பி போனதுக்கு இப்படி தான் நடக்கணுமா?