காணாமல்போன லக்கேஜ்.. விமான நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்து கண்டுபிடிச்ச நபர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாணாமல் போன தனது பையை கண்டுபிடிக்க இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்து இருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
படிச்சது லேப் டெக்னீசியன்.. பார்த்தது மருத்துவர் வேலை.. தொக்காக தூக்கிய போலீஸ்..!
பெங்களூரைச் சேர்ந்த நந்தன் குமார் என்ற இளைஞர் கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று பாட்னாவில் இருந்து இண்டிகோ விமானம் மூலமாக பெங்களூர் சென்று இருக்கிறார். அப்போது தனது பையை போலவே இருந்த சக பயணி ஒருவருடைய பையை நந்தன் குமார் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டிற்கு சென்ற பின்னர்தான் அது தன்னுடைய பை அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து அவர் பேசுகையில்," என்னுடைய மனைவி தான் முதலில் அதை பார்த்தார். பைகளில் பூட்டு போடும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. ஆனால் அந்த பையில் பூட்டு இருந்தது. ஆகவே நாங்கள் சந்தேகம் அடைந்தோம்" என்றார். இதனை அடுத்து பையை மாற்றி எடுத்து வந்துவிட்டதை உணர்ந்த குமார் இண்டிகோ விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.
தன்னிடம் பேசிய அதிகாரியிடம் தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறிய குமார் சக பயணியிடம் இந்த விபரத்தை கூறுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் அந்த பயணியின் விபரத்தை கொடுத்தால் தான் நேரடியாக சென்று பையை மாற்றிக் கொள்வதாக குமார் கூறியிருக்கிறார். ஆனால் நிறுவனத்தின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பிற்கு எதிரானது எனக்கூறி அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.
மேலும் இதுகுறித்து 24 மணி நேரத்தில் மீண்டும் அழைப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். இது குறித்து பேசிய குமார் "நான் புகார் அளித்த பிறகும் அந்த அதிகாரி மீண்டும் அழைக்கவில்லை. ஆகவே என்னுடைய சக பயணியை தேடும் பணியில் நான் இறங்கினேன்" என்றார்.
ஹேக்
இதனை அடுத்து இண்டிகோ விமான நிறுவனத்தின் இணைய தளத்திற்குள் சென்ற குமார் பிஎன்ஆர் எண்ணை கொண்டு அந்த இணையதளத்தின் டெவலப்பர் கன்சோல் மூலமாக பயணிகளின் விபரங்களை எடுத்துள்ளார். அதில் தனது சக பயணியின் தொலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் குமார் கண்டுபிடித்திருக்கிறார்.
இறுதியாக தன்னுடைய சக பயணியின் முகவரியை அறிந்து தன்னுடைய பையை மாற்றியிருக்கிறார் குமார். தனது வீட்டிலிருந்து 6 - 7 கிலோமீட்டர் தூரத்தில் அந்த பயணியின் வீடு இருந்ததாக குமார் கூறியுள்ளார். இதன்பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் இண்டிகோ நிறுவனத்தை டேக் செய்து உங்களுடைய இணையதளத்தில் பாதிப்பு இருப்பதாகவும் அதை சரி செய்யும் படியும் பதிவிட்டிருக்கிறார் குமார். என்னுடைய சக பயணியின் முகவரியை அதன் மூலமாக தெரிந்து கொண்டதாகவும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மறுப்பு
இதனை இண்டிகோ விமான நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் "எந்த ஒரு பயணியும் இணையதளத்திலிருந்து பிஎன்ஆர், கடைசி பெயர், தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி தங்களது முன் பதிவு விவரங்களை பெறலாம். இது உலக அளவில் அனைத்து விமான அமைப்புகளிலும் நடைமுறையில் உள்ள விதியை முறைதான். பாதுகாப்பு விஷயத்தில் இண்டிகோ ஒருபோதும் சமரசம் செய்யாது" என குறிப்பிட்டுள்ளது.
2 வருஷத்துக்கு பொறியியல் கல்லூரிகள் துவங்க தடை.. AICTE அதிரடி.. என்ன காரணம்?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Gym-ல அதீத உடற்பயிற்சியா?.. திடீரென மயங்கி விழுந்து பெண் பலி..
- "எனக்கும் ஒன்னு செஞ்சு குடுங்க"..மரவேலையில் திறமையை காட்டிய நபர்..ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்..!
- இந்த போன்ல 'Wedding Shoot'-ஆ.?.. குசும்புக்கும் ஒரு அளவில்லையா?.. வைரல் வீடியோ..!
- அம்மாவை விட்ருங்க.. ஓடிவந்த மகன்.. மனைவியின் மீது வந்த சந்தேகத்தால் கணவர் செய்த விபரீத காரியம்..!
- "மகன் வரணும்னா 1 கோடி வேணும்"..தொழிலதிபருக்கு வந்த மிரட்டல் கால்.. மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த ரவுடிகள்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!
- "முதல் காதலியும் போய்ட்டா.. இப்ப இரண்டாவது காதலியும்.." மனமுடைந்த காதலன்.. "நீ இல்லாத உலகத்துல".. விபரீதத்தில் முடிந்த காதல்
- அடிக்கடி காணாமல் போன நகைகள்.. சிசிடிவி கேமராவை வச்சுட்டு வெயிட் பண்ண உரிமையாளர்.. இறுதியில் வெளிவந்த உண்மை..!
- நடு ரோட்ல கும்ஃபூ.. "அங்க என்ன சத்தம்".. போலீசை கண்டதும் தெறித்து ஓடிய போதை ஆசாமி..!
- "இனி உன் அப்பா திரும்பி வரவே மாட்டாரு.." ஒரே ஒரு மொபைல் அழைப்பால் நொறுங்கி உடைந்த இளம்பெண்.. அதிர்ச்சி பின்னணி
- எனக்கு வேற வழி தெரியல சார்..Office ஐ வீடாக பயன்படுத்தும் ஊழியர்.. வைரல் வீடியோ..!