ஒரு நாளைக்கு 3 ‘சோப்’... ஒரு ‘டஜன்’ பிளாஸ்டிக் பை... 10 மணி நேரக் ‘குளியல்’... ‘விநோத’ பிரச்சனையால் ‘ஐடி’ ஊழியருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் OCD பிரச்சனை காரணமாக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் OCD (Obsessive Compulsive Disorder) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் திரும்பத் திரும்ப ஒரே செயலை யோசித்துக் கொண்டும், செய்து கொண்டும் இருப்பார்கள். அதில் சிலர் நிலை மிகவும் மோசமாகி தற்கொலை வரை செல்லும் அபாயம் கூட உள்ளதாகக் கூறப்படுகிறது.

OCD பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக குளியலுக்காக செலவளித்து வந்துள்ளார். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளிக்கச் செல்லும் அவர் 6 மணி வரை குளித்துவிட்டு பின்னரே அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் மீண்டும் குறைந்தது 4 மணி நேரமாவது குளிக்கும் அவர் அதற்காக ஒரு நாளைக்கு 3 சோப்புகள் மற்றும் ஒரு டஜன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்துள்ளார். தண்ணீர் குழாய் போன்றவற்றை தொடும்போது கைகள் அசுத்தமாகிவிடாமல் இருக்க அவர் பிளாஸ்டிக் பைகளை கிளவுஸ் போல உபயோகித்து வந்துள்ளார். மேலும் தினமும் பல மணி நேரக் குளியலால் அவர் சருமப் பிரச்சனைக்கும் ஆளாகி இருந்துள்ளார். 

ஐடி ஊழியரின் இந்த பிரச்சனை குறித்து அறிந்த அவருடைய மனைவி அவரை அதிலிருந்து மீட்க எவ்வளவோ முயற்சித்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே அவர் கடைசியாக கணவரை விவாகரத்து செய்துவிட்டுச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஐடி ஊழியரின் தாய் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருடைய பிரச்சனையைக் கேட்ட மருத்துவர்கள், அதன் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவருக்கான சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.

BENGALURU, IT, OCD, BATH, EMPLOYEE, WIFE, DIVORCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்