'பகல்ல டாக்டர்...' 'நைட்ல பயங்கரவாதிங்க கூட காண்டாக்ட்...' - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூர் எம்.எஸ். ராமையா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

கண் மருத்துவரான அப்துல் ரகுமான் என்பவர் பெங்களூருவிலுள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்பாக கருதப்படும் இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம்
(Islamic State Khorasan Province (ISKP) என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஐ.எஸ் அமைப்புக்காக சண்டையிட்டு படுகாயம் அடையும் பயங்கரவாதிகளுக்கு என மருத்துவ உதவி வழங்கும் ஒரு செயலியையும் உருவாக்கி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணத்திற்காக இந்தியாவில் முழு மூளையாகவே அப்துல் ரகுமான் செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பசவன்குடியில் உள்ள அவரின் வீட்டில்  நேற்று அப்துர் ரகுமானை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அப்துல் கடந்த 2014-ம் ஆண்டு சிரியாவுக்கு சென்று, அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் காயமடைந்த பயங்கரவாதிகளுக்கு 10 நாள்களாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சையும் அளித்துள்ளார்.

மேலும் அப்துர் ரகுமான் தங்கியிருந்த 3 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி லேப் டாப் , செல்போன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்