'இப்ப பிரசவம் பார்த்தே ஆகணும்...' என்ன பண்றது...? வேற வழியே இல்ல...' 'நண்பன் பட காட்சியைப் போல் நடந்த சம்பவம்...' - வாழ்த்தும் விஜய் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடியோ கால் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா அச்சம் காரணமாக 5 வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. இந்நிலையில் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் ஹனகல் டவுன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான வாசவி என்பதற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி பொறுக்க முடியாத அலறி துடித்தார். மேலும் அவரின் உறவினர்களும், வாசவியின் கணவரும் மருத்துவமனை செல்ல வாகனத்தை தேடி அலைந்தனர். பலரும் ஞாயிறு ஊரடங்கை காரணம் காட்டி, வாகனத்தை கொண்டு வர டிரைவர்கள் மறுத்து விட்டனர்.

என்ன செய்வதென்று அறியாத வாசவியின் கணவர் திக்குமுக்காடி போயுள்ளார். அப்போதுதான் வாசவியின் உறவுக்கார பெண் ஒருவர் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவரான பிரியங்கா மண்டகி நியாபகம் வந்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு மனைவியின் நிலை குறித்து எடுத்து கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து தனக்கு வீடியோ கால் செய்யுமாறு கூறிய பிரியங்கா வாசவியின் நிலை அறிந்து, உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டும்,  எனவே தான் சொல்வதையெல்லாம் செய்யுமாறு வாசவியின் கணவரிடம் கூறியுள்ளார். மேலும் வாசவியின் உறவுக்கார பெண்களான மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா, சிவலீலா ஆகியோர் பிரசவம் பார்த்து, ஒரு அழகான ஆண் குழந்தையினை இவ்வுலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

தன் குழந்தையை பார்த்த வாசவியின் கணவர் உணர்வு பொங்க அள்ளியெடுத்து கொஞ்சி மருத்துவர் பிரியங்காவிற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் குழந்தையை வீடியோ கால் மூலம் டாக்டர் பிரியங்காவிடம் காண்பிக்க, அவரும் வீடியோ காலில் அந்த குழந்தையை கொஞ்சினார்.

இந்நிலையில் வாசவி நேற்று முன்தினம் காலை ஹனகல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தற்போது நண்பன் படத்தில் வரும் காட்சிகளை போல ஒத்துள்ளதாக கூறி பலரும் இந்த செய்தியை ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர். தளபதி ரசிகர்களும் நண்பன் பட பாணியில் குழந்தை என்ற வாசவிக்கும் அவரின் குழந்தைக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்