‘ஏலியன்ஸ் வராங்களா?’.. "பெங்களூர் பூம்ம்ம்ம் சத்தத்துக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம்?".. ட்ரெண்ட் ஆகும் ட்விட்டர்வாசிகளின் கற்பனைகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரில் நேற்று மதியம் கேட்ட அதிபயங்கரச் சத்தம் நகரையே அதிரவைத்ததை அடுத்து, பரபரப்பான பல கோணங்களில் பலரும் இது பற்றி பேசத் தொடங்கினர்.

முதலில் இது பயங்கரமான இடிச்சத்தம் என்று பேசிய மக்கள், வீடும் ஜன்னலும் அதிர்ந்ததையும், ஒரு நடுக்கம் உண்டானதையும் உணர்ந்தனர். பின்னர் சுகோய்-30 ஜெட்  ரக போர் விமானங்கள் பறந்ததால் ஏற்படும் சோனிக் பூம்  எனப்படும் ஒருவித விமானத்தின் வேகமான இயக்கத்தின் விளைவ்வுதான் இந்த சத்தம் என்றும் இந்த பொருள்கள் ஒலியின் வேகத்தை விட வேகமாக மேல்நோக்கி பறக்கும்போது இப்படியான இடி போன்ற ஒலி உருவாவதாகவும் விளக்கங்கள் வெளியாகின.

இதனிடையே இது ரஜினிகாந்தின் எண்ட்ரி என்று தொடங்கி பல வகையான மீம்ஸ்கள் வெளியாகின. இதையெல்லாம் விடவும் ட்ரெண்டானது ஏலியன்கள் வருகை என்கிற வதந்திதான். ஆம், வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின்

வருகையால்தான் இந்த சத்தம் உருவானதாக ட்விட்டரில் ட்ரெண்டிங் ட்வீட்கள் பதிவிடப்பட்டன. இதை கலாய்க்கும் விதமாக ஹிரித்திக் ரோஷனின் ரசிகர் ஒருவர், “ஹ்ரித்திக் ஏலியன் ஜாதுக்களுக்கு தவறுதலாக மீண்டும் சிக்னல் கொடுத்திட்டீங்களா?” என்று கேட்க,

அதற்கு ஹ்ரித்திக் ரோஷனோ, “அந்த தவறையெல்லாம் செய்யலைங்க.. எல்லாம் நேரம்!” என்று பதில் ட்வீட் போட்டார். இதேபோல் இன்னொரு கிரிக்கெட் ரசிகர் ஒருவர், “கவலைப் படாதீங்க! தல தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சு

மைதானத்தைத் தாண்டி விரட்டப்பட்ட பந்துகளை எல்லாம் ஏலியன்கள் எடுத்துக்கொண்டு வரும்” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்