ஐயா நான் ஆட்டோ டிரைவர்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு! பொருளாதாரம், மியூச்சுவல் ஃபண்ட்னு பிரித்து மேயும் பெங்களூரு இளைஞர்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய டிஜிட்டல் உலகம் அனைவருக்கும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான தளத்தை விஸ்தரப்படுத்தி தந்திருக்கிறது.

Advertising
>
Advertising

உலகெங்கிலும் எந்த மூளை முடுக்கில் இருந்தாலும் ஒருவர் தன்னுடைய அறிவை பகிர முடியும் பிறருடைய அறிவை பெற முடியும் அவை அனைத்தையும் டிஜிட்டல் வாயிலாக நிகழ்த்த முடியும் என்கிற அற்புதம் இந்த நூற்றாண்டில் அதிவேகமாக அரங்கே இருக்கிறது.

அந்த வகையில் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான முதலீட்டு சிக்கல்களுக்கான தரவுகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் தம்முடைய சமூக வலைதளங்கள் மூலமாக தரக்கூடியவராக இயங்கி வருகிறார். இவருடைய ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் இவர் குறித்து தம் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

ஆம், சுஷாந்த் கோஷி என்பவர், தான் ஒரு ஆட்டோவில் பயணித்ததாகவும், அந்த ஆட்டோ டிரைவர் பெயர் ஜனார்த்தன் என்றும் தெரிவித்ததுடன், ஜனார்த்தன் ஒரு சமூகவலைதள இன்ஃபுளூயன்சர் என்றும், தம்முடைய சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதி தொடர்பான பொருளாதார தரவுகள், சிக்கல்களுக்கான தீர்வுகள் மற்றும் தரவுகளை தரக்கூடியவராக இருக்கிறார் என்றும் இது ஒரு பீக் பெங்களூர் மொமெண்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த பலரும் ஒருபுறம் ஆட்டோ ஓட்டுநராக இருந்துகொண்டு, இன்னொருபுறம் பொருளாதார தீர்வுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான உத்திகள் உள்ளிட்டவற்றை எளிமையாக விளக்கி தொடர்ந்து பல வீடியோக்களை பதிவேற்றி வரும் ஆட்டோ டிரைவர் ஜனார்த்தனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், இணையதளத்தை சரியாக பயன்படுத்தினால் நன்மை என்பதற்கு முன்னுதாரணமாக இவர் இருந்து வருவதாகவும் பாராட்டி வருகின்றனர்.

AUTO DRIVER, BANGALORE, INTERNET, MUTUAL FUND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்