பதவியேற்பு விழாவுக்கு ‘ஸ்பெஷல் கெஸ்ட்’ இவர் மட்டும்தானாம்.. திரும்பி பார்க்க வைத்த ‘சுட்டி பையன்’! காரணம் என்ன..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் பேபி மப்ளர் மேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலைமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்கின்றனர்.

இந்த பதவியேற்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (16.02.2020) காலை 10 மணிக்கு ராமலீலா மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கமாக மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிர்கட்சிகள் வரிசையில் உள்ள கட்சிகள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், பிற மாநில எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கும் விழாவிலும் இதேபோல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், டெல்லியின் முதலமைச்சராக கெஜ்ரிவால் பதவியேற்பது டெல்லிக்கான குறிப்பிட்ட நிகழ்ச்சியாகும். இதில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிற மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் பேபி மப்ளர் மேனுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம், டெல்லியின் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, கெஜ்ரிவால் போல தொப்பி, மப்ளர், கண்ணாடி மற்றும் மீசை வரைந்திருந்த அவ்யன் தோமர் என்ற குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் கெஜ்ரிவாலை காண்பதற்காக குழந்தையுடன் அவர்களது பெற்றோர் நீண்ட நேரமாக காத்திருந்துள்ளனர். ஆனால் கெஜ்ரிவாலை காணமுடியவில்லை. அதனால் அக்குழந்தைக்கு மட்டும் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளனது.

AAP, ARVINDKEJRIWAL, BABYMUFFLERMAN, DELHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்