‘டாக்டர்கள் என் குழந்தையை தொடவே மாட்டேனுட்டாங்க!’.. மருத்துவமனை வளாகத்திலேயே கட்டியணைத்து அழுத தந்தை.. கடைசியில் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 123 கி.மீ தொலைவில் உள்ள கன்னோஜ் எனும் மாவட்டத்தில் இருந்து அம்மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு, வீங்கிய கழுத்துப் பகுதி மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது 1 வயது குழந்தையை பெற்றோர் அழைத்து வந்ததாகவும், ஆனால், மருத்துவர்கள் குழந்தையைத் தொட மறுத்துவிட்டதாகவும் கூறப்படும் சம்பவம் உலுக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல். குழந்தையை 90 கி.மீ தூரத்தில் உள்ள கான்பூர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், இதனால், மருத்துவமனை வளாகத்திலேயே, குழந்தையின் தந்தை, குழந்தையை கட்டியணைத்துக்கொண்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் பரவி நெஞ்சை உருக்கியுள்ளது. அதன் பிறகு அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்ததை பார்த்துவிட்டு, சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முன்வந்தும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய குழந்தையின் தந்தை பிரேம்சந்த், “ஆஸ்பத்திரிக்கு வந்த சில பேர் வீடியோ எடுக்க ஆரம்பிச்சப்பதான் டாக்டர்கள் எங்க குழந்தையைப் பரிசோதனை செஞ்சாங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த டாக்டரும் குழந்தையைத் தொட தயாரா இல்லை. நாங்க கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அங்கதான் இருந்தோம். கான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்லிக்கிட்டே நான் ஏழ்மையானவன். என்னிடம் பணமே இல்ல. என்னால் என்ன செய்ய முடியும்?” என்று அழுதபடி கூறியுள்ளார். இதேபோல் குழந்தையின் தாய் ஆஷா தேவி பேசும்போது குழந்தையின் கழுத்துப் பகுதி வீங்கி இருந்ததாகவும், அதனால் நாங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் மருத்துவமனையில் காத்திருந்ததாகவும், அதன்பிறகு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும், ஆனால், அதற்குள் குழந்தை இறந்துவிட்டான் என்றும் மனம் உருகி அழுதுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய கன்னோஜ் மருத்துவமனை உயர் அதிகாரி ராஜேஷ் குமார் மிஸ்ரா பேசுகையில், மாலை 4:15 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ நிபுணர் ஒருவர் குழந்தைக்கு சிகிச்சையளிக்க அவசரமாக அழைக்கப்பட்டதை அடுத்து 30 நிமிடங்களில் குழந்தை இறந்தான். மருத்துவர்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை. இதில், அலட்சியம் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தூங்கிட்ருந்த ஒரு வயசு குழந்தைய...' 'புதர் மறைவுல வச்சு`... - நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!
- "பிறந்த குழந்தைக்கு நேர்ந்துள்ள கதி!".. 'மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய' இந்தியக் குழந்தை!
- 'படிச்சு படிச்சு சொன்னேன்... அவன் கேட்கவே இல்ல'... ஆதங்கத்தில் தந்தை எடுத்த முடிவு!.. அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓட்டம்!
- VIDEO: 'ஊரடங்கால வேல போச்சு... கந்துவட்டி கொடுமை'... மகனின் டாக்டர் கனவுக்காக... ஏழைத் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!
- 'சிகிச்சை' கிடைக்கும் என 'நம்பி வந்த' முதியவர்... 'வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சோகம்...' '4 மணி நேரம்' உடல் எடுக்கப்படாமல் 'கிடந்த அவலம்...'
- மீண்டும் ஒரு ‘விசாரணை கைதி’ மருத்துவமனையில் அனுமதி.. ‘கோவில்பட்டியில்’ அடுத்த அதிர்ச்சி..!
- 'நீச்சல் கற்கும் போது மூழ்கிய குழந்தை!.. சட்டென தண்ணீரில் குதித்த தந்தை!'... கதறித்துடித்த தாய் கண்ட காட்சியை எப்படி விவரிப்பது?
- '14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா...' 'வயிற்று வலின்னு போய் செக் பண்ணினப்போ தான் அந்த இடி விழுந்துருக்கு...' நிலை குலைந்து போன அம்மா...!
- தந்தையர் தினத்தன்று... மகன் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த அப்பா!.. மனதை உலுக்கும் கோரம்!
- 'அம்மா, அப்பா 2 பேருக்கும் கொரோனா பாஸிட்டிவ்...' 'நெகட்டிவ் ரிப்போர்ட் வந்த 6 மாச குழந்தைய...' தற்காலிகமா தத்தெடுத்து அம்மாவான டாக்டர்...!