"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டாரா பாபா ராம்தேவ்?".. பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு கண்டுபிடித்துள்ளதாக கூறும் மருந்தை விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
பாபா ராம்தேவுடன் தொடர்புடைய 'பதஞ்சலி' நிறுவனம் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறி 'கொரோனில் மற்றும் ஸ்வாசரி' என்ற பெயரில் சந்தையில் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. மேலும், இந்த மருந்து ஏழு நாட்களுக்குள் கொரோனாவை 100% குணப்படுத்திவிடும் என்றும் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக பாபா ராம்தேவ், "நாங்கள் இன்று கொரோனா மருந்தை அறிமுகப்படுத்துகிறோம். இவற்றில் இரண்டு சோதனைகளை நாங்கள் நடத்தினோம். இந்த ஆய்வு டெல்லி, அகமதாபாத் எனப் பல நகரங்களில் நடந்தது. மொத்தம் 280 நோயாளிகள் சோதிக்கப்பட்டதில் 100 சதவீதம் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸையும் அதன் சிக்கல்களையும் இதனால் கட்டுப்படுத்த முடிந்தது" என்று கூறினார்.
இந்நிலையில், மத்திய அரசின் 'ஆயுஷ்', இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் வெளியிட்டுள்ள கொரோனா ஆயுர்வேத மருந்துகள் பற்றிய செய்திகளை மத்திய அமைச்சகம் அறிந்திருக்கிறது. அந்நிறுவனம் மருந்துகளின் விவரங்களை வழங்கவும், அதனை வெளியிடுவதையும் விளம்பரப்படுத்துவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா மருந்து சிகிச்சை குறித்தான முறையாக அதன் கூறுகள் ஆராயப்படும் வரை இந்த மருந்தினை நிறுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் மேலும் 137 பேருக்கு கொரோனா!.. தேனியிலும் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800-ஐ கடந்தது!.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி!
- ஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்?
- "ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
- 'கொரோனா மனிதர்கள் மூலம் மட்டும் தான் பரவுமா'?... 'பலரின் கேள்விக்குக் கிடைத்த விடை'... இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
- திருமண ஊர்வலத்தின் போது வந்த ஒரு ‘போன்கால்’.. பாதியில் நிறுத்தப்பட்ட ‘கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- கொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'!
- "யாருக்காச்சும் கொரோனா பரவியிருந்தா மன்னிச்சிடுங்க!".. வைரலான பிரபல டென்னிஸ் வீரரின் உருக்கமான இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
- "37 ஆயிரம் கோடி இழப்பா?".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா?'.. புலம்பும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்!