நம்ம எல்லாம் மிடில் கிளாஸ்".. 90-ஸ் கிட்ஸ்களின் ஜாலியான அனுபவங்களை புட்டுப்புட்டு வைத்த இளம்பெண்.. IAS அதிகாரி பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை முறை குறித்து நகைச்சுவையுடன் இளம்பெண் பேசும் வீடியோ ஒன்றை ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | உலகின் அதிவேக வெர்டிகல் ரோலர் கோஸ்டர்.. கின்னஸ் சாதனை படைத்த துபாய்.. அசர வைக்கும் வீடியோ..!

பொதுவாக மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமும், பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும் கொண்டது. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை குறித்து நகைச்சுவையுடன் பேசியிருக்கிறார். தான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், குடும்பத்தில் பின்பற்றப்படும் சில வேடிக்கையான நடைமுறைகள் பற்றியும் அவர் பேசியுள்ள இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவனீஷ் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்களையும் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதன் காரணமாகவே இவரை ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள வீடியோ பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

அசர வைத்த பேச்சு

இந்நிலையில், அவனீஷ் சரண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் நிதி நர்வால் எனும் இளம்பெண் பேசுகிறார். அப்போது அவர்,"நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வருகிறேன். நமது குடும்பங்களில் பழைய டிஷர்ட்கள் தரை துடைக்க பயன்படுத்தப்படும். போர்ன்விட்டா பாட்டில் காலியாகிவிட்டால் அதனை தூக்கி வீசிவிட மாட்டார்கள். அதனுள் பருப்பை அடைத்து பத்திரப்படுத்துவார் அம்மா. அப்பா, அம்மாவை கட்டிப்பிடிப்பது நமக்கெல்லாம் ரொம்பவே கடினம். நம் குடும்பங்களில் நமக்காக பெற்றோர்கள் போராடுவார்கள். சில நேரங்களில் நம்மை போராட ஊக்குவிப்பார்கள். நாம் ஒருபோதும் நமது நம்பிக்கையை இழந்துவிட கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள். மிடில் கிளாசில் இருந்து வந்த நமக்கு நம்முடைய பெற்றோர் மீது எப்போதும் ஒரு மதிப்பு இருக்கும். ஆனால் நாம் வாங்கும் மதிப்பெண்களே தங்களுக்கு மதிப்பை தரும் என நமது பெற்றோர்கள் நினைப்பார்கள்" என பேசுகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்து அவனீஷ் சரண்,"நாம் அனைவரும் மிடில் கிளாஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ வைரலாக பரவ, "90-ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் இத்தகையை அனுபவங்கள் கிடைத்திருக்கும்" எனவும், "எமோஷனலான பேச்சு" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

Also Read | ட்விட்டரை கைப்பற்றினாரா எலான் மஸ்க்..? முதல் வேலையா இந்தியரான ட்விட்டர் CEO நீக்கமா.? பரபரப்பு தகவல்கள்..!

AWANISH SHARAN, AWANISH SHARAN IAS, INDIAN MIDDLE CLASS THINGS, அவனீஷ் சரண் IAS

மற்ற செய்திகள்