"இப்டி பண்றவங்கள உள்ளயே விடக்கூடாது".. ட்விட்டரில் ஆவேசமான IAS அதிகாரி.. கோதாவில் குதித்த நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில் திருமணத்தைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள் பெரிய அளவில் இணையவாசிகள் மத்தியில் பேசப்படுகிறது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எல்லாம் பசங்களுக்காக தான்".. 12 வருசமா அரசு பள்ளி ஆசிரியர் செய்து வரும் அசத்தலான காரியம்.. குவியும் பாராட்டு!!

திருமண அழைப்பிதழ்கள், திருமணத்திற்கான போட்டோ ஷூட் தொடங்கி திருமண நேரத்தில் ஆட்டம், பாட்டம், பரிசுப் பொருட்கள் என புதுமையாக இருக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பெரிய அளவில் பலரது கவனத்தை பெறவும் செய்கிறது.

இப்படி திருமணத்தை சுற்றி நடைபெறும் விஷயங்கள் புதுமையாகவும் தோன்றும் வேளையில், திருமணம் என்றால் அங்கே விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு பிரத்யேக இடமுண்டு.

மற்ற விஷயங்களை பார்த்து பார்த்து செய்வது போல உணவு வகைகளையும் விருந்தினர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்றும் மணமக்களின் குடும்பத்தினர் விரும்புவார்கள். அதற்கேற்ப அனைவரையும் கவரும் வகையிலான உணவு பொருட்களையும் தயார் செய்து அவர்களை திருப்திபடுத்தவும் நினைப்பார்கள். இப்படி விதவிதமாக நாம் உணவு வகைகளை செய்யும்போது சில நேரம் பொருட்கள் மிச்சம் வரும் சூழலும் உருவாகும். அதனை சிலர் அருகே உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் கொடுக்கும் அதே வேளையில், மற்ற சில இடங்களில் உணவுகள் அதிகம் வீணாக்கப்படுவதும் உண்டு. இது திருமண நிகழ்ச்சி மட்டுமில்லாமல் உணவின் முக்கியத்துவம் என்பது அனைத்து விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இருக்கையில் இது தொடர்பான ஒரு பதிவை தான் ஐஏஎஸ் அதிகாரியான அவானிஷ் சரண் என்பவர் தன்னுடைய Twitter பக்கத்தில் வெளியிட்டு சற்று ஆவேசமாகவும் சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவானிஷ் சரண், ஒரு நிகழ்ச்சியில் மேஜை மீது ஏராளமான உணவுப் பொருட்கள் மீதம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "இப்படியான ஆட்களை முதலில் இது போன்ற நிகழ்ச்சிக்கு வருவதையே தடை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ஆவேசமாக ஐஏஎஸ் அதிகாரி குறிப்பிட்ட இந்த கருத்து தொடர்பான புகைப்படம் பெரிய அளவில் இணைவாசிகள் மத்தியில் வைரல் ஆனதுடன் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. உணவு வீணாக்குவது என்பது ஒரு தவறான செயல் என்றும் அது இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு தான் அதன் அருமை புரியும் என்று ஏராளமானோர் தங்களின் கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "தடயத்தை மறைச்சே ஆகணுமே".. ஷ்ரத்தா எலும்பை எடுத்து.. அஃப்தாப் செஞ்ச பதற வைக்கும் காரியம்!!

AWANISH SHARAN, AWANISH SHARAN IAS, FOOD WASTE, WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்