"பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன்.. பரவும் ஆட்டோக்காரர் மகனின் மார்க் ஷீட்." மனம் உருகிய ஆட்டோ ஓட்டுநர்.. வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக எந்த ஒரு பெற்றோருக்கும், அவர்களது குழந்தைகள் ஏதாவது ஒரு காரியத்தில் பெரிதாக சாதித்து விட்டால், அவர்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

Advertising
>
Advertising

அதே போல, பிள்ளைகளின் சாதனைகளை அனைவரிடமும் பெருமையாக பேசி, தங்களின் குழந்தைகளின் வெற்றியை தங்களின் வெற்றியை போல கொண்டாடுவார்கள்.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செய்துள்ள விஷயம் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பெருமைப்படும் ஆட்டோ ஓட்டுநர்

இது தொடர்பாக விகாஸ் அகோரா என்ற ஒரு நபர், தனது Linked in பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒரு மாணவனின் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியல் அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கேப்ஷனில், "மகாராஷ்டிராவின் அகோலா பகுதியில் ஒரு ஆட்டோவில் இன்று நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, அந்த ஆட்டோ ஓட்டுனர் அவரது மகனின் மதிப்பெண் பட்டியலை மிகவும் மகிழ்ச்சியுடன் எங்களிடம் காட்டினார். அது மட்டுமில்லாமல், தனது மகன் குறித்து எங்களிடம்,  'எனது மகனின் மதிப்பெண் பட்டியலைப் பாருங்கள். எனது மகனுக்கு மிகச் சிறந்த மூளை உள்ளது' எனக் கூறி, தனது மகனின் சாதனையை மிகவும் பெருமிதமாக எங்களிடம் பகிர்ந்து கொண்டார்" என தனது கேப்ஷனில் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

600 க்கு 592..

அந்த ஆட்டோ ஓட்டுனரின் மகனான கருட் சச்சின் பாலு என்பவர், ப்ளஸ் 2 தேர்வில் 600 க்கு 592 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். மிகவும் பின்தங்கிய குடும்ப சூழ்நிலையில் இயங்கும் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகன், அத்தனை மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளதை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

மேலும், இந்த Linkedin பதிவின் கீழ், அந்த மாணவரின் உயர் கல்விக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தெரியப்படுத்தலாம் என்றும் சிலர் பாராட்டி கமெண்ட் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளிடமும் தனது மகனின் சாதனை குறித்து மிகப் பெருமையுடன் விளக்கும் தந்தையைப் பற்றியும் இணையத்தில் அதிகம் கருத்து தெரிவித்து, அவரை பாராட்டியும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

AUTO DRIVER, MARK SHEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்