"மக UPSC-க்கு படிக்குறா, நானும் உதவி பண்ணனும்'ல".. ஆட்டோ ஓட்டிக்கிட்டே அப்பா செஞ்சு வரும் காரியம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக, இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியாவில் பலரும் அதிக நேரம் செலவிடுவதால் நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை பற்றியும் நம்மால் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Also Read | "இன்னும் கொஞ்ச நாளுல".. Foriegn போக வேண்டிய பையன்.. இரவில் வந்த போன் கால்?.. காலையில் கிராம மக்கள் கண்ட அதிர்ச்சி!!

அந்த வகையில் ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகள் அவர்களின் வாழ்நாளில் பெரிதாக சாதிக்க வேண்டும் என உடனிருந்து முழு ஆதரவையும் கொடுப்பார்கள். அதிலும் பிள்ளைகளுக்கு பெரிய லட்சியம் ஒன்று இருந்தால், அவர்கள் அதனை அடைய பெற்றோர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள்.

அப்படி ஒரு ஆட்டோ டிரைவர் குறித்த செய்தி தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அபிஜித் முத்தா என்ற நபர் ஒருவர், Linkedin தளத்தில் தான் சந்தித்த ஆட்டோ டிரைவர் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, Uber மூலம் ஆட்டோ ஒன்றை அபிஜித் புக் செய்துள்ளார். தொடர்ந்து, ராகேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் வந்துள்ளார். அந்த சமயத்தில் யூடியூப் வீடியோ ஒன்றை ராகேஷ் பார்த்து கொண்டிருந்தததை அபிஜித் கவனித்துள்ளார். தொடர்ந்து, அவர் ஆட்டோவில் ஏறும் போது அதனை மாற்றிய ராகேஷ், அபிஜித் செல்ல வேண்டிய இடத்தின் மேப்பை பார்த்துள்ளார்.

ஆட்டோ எடுத்த பின்னர், மீண்டும் யூடியூப் வீடியோவை ராகேஷ் பார்க்கத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை சிறிது நேரம் கவனித்து கொண்டிருந்த அபிஜித் முத்தா, ராகேஷிடம் யூடியூப் வீடியோவை ஆட்டோ ஓட்டும் போது பார்ப்பதற்கான காரணத்தை கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ராகேஷ், "இந்த சேனலில் Current Affairs மற்றும் பொருளாதாரம் குறித்த வீடியோக்கள் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு அபிஜித்தோ நீங்கள் தேர்வுக்கு தயாராகிறீர்களா என கேட்க, ராகேஷ் சொன்ன பதில் தான் இணையவாசிகள் பலரது இதயத்தையும் வென்றுள்ளது. "எனது மகள் UPSC தேர்வுக்காக தயாராகி வருகிறார். அவர் நூலகத்தில் இருந்து திரும்பி வந்த பிறகு நாங்கள் இந்த தலைப்புகளில் உள்ள தகவல்கள் குறித்து விவாதிப்போம்" என ராகேஷ் தெரிவித்துள்ளார்.

அதே போல, டிராபிக் சிக்னலில் ஆட்டோ நிற்கும் போது வீடியோவை பார்க்கும் ராகேஷ், மற்ற நேரங்களில் ஆட்டோ ஓட்டுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் அபிஜித் குறிப்பிட்டுள்ளார். மகள் UPSC தேர்வில் தயாராக தானும் படித்து மகளுக்கு உதவி செய்யும் தந்தை பற்றிய செய்தி, நெட்டிசன்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Also Read | பிரபலங்கள் தான் 'Target'.. கணவர் வைக்கும் ரகசிய கேமரா??.. மனைவி பாத்த 'தில்லாலங்கடி' வேலை?!.. நாட்டையே அதிர வைத்த குற்றம்?!

AUTO DRIVER, DAUGHTER, UPSC EXAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்