‘ரூ.510 கோடிக்கு ஏலம் போன மதுபானக்கடை’!.. இந்த ஏலத்தை கேட்டது யாரு? இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க காரணம் என்னன்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் ஒருவர் மதுபானக்கடையை ரூ.510 கோடிக்கு ஏலம் எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ரூ.510 கோடிக்கு ஏலம் போன மதுபானக்கடை’!.. இந்த ஏலத்தை கேட்டது யாரு? இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க காரணம் என்னன்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள நோஹார் கிராமத்தில் இருக்கும் மதுபானக்கடை ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு ரூ.72 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கிய ஏலம் நள்ளிரவு வரை நீடித்துள்ளது. கடைசியாக ரூ.510 கோடிக்கு மதுபானக்கடை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Auction of wine shop attracts bid of Rs510 cr in Rajasthan

ஒரு கிராமத்தில் இருக்கும் மதுபானக்கடைக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதற்கு, இரண்டு குடும்பங்களிடையே ஏற்பட்ட கவுரவ பிரச்சனையே காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு லாட்டரி முறையில் இந்த மதுபானக்கடை ரூ.65 லட்சத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Auction of wine shop attracts bid of Rs510 cr in Rajasthan

ஆனால் இந்த ஆண்டு மதுபானக்கடையை ஏலம் முறையில் கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நடைபெற்ற ஏலத்தில்தான், இரு குடும்பங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஏலம் கேட்டுள்ளனர். இதனால் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. காலை தொடங்கிய ஏலம் நள்ளிரவு 2 மணி வரை நீடித்து இந்த பெருந்தொகையில் முடிந்துள்ளது.

இதில் கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால், இந்த மதுபானக்கடையை போட்டிப்போட்டு ஏலம் கேட்டது இரு பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உறவினர்களான கிரண் கன்வார் மற்றும் பிரியங்கா கன்வார் ஆகிய இருவரும் மாறிமாறி ஏலம் கேட்டதில், கடைசியாக கிரண் கன்வார்தான் ரூ.510 கோடிக்கு மதுபானக்கடையை ஏலத்தில் எடுத்துள்ளார்.

கடையின் அடிப்படை விலையான ரூ.72 லட்சத்தை விட 708 மடங்கு அதிகமாக மதுபானக்கடை ஏலம் எடுக்கப்பட்டதை, அம்மாநில அரசு மற்றும் கலால் துறை அதிகாரிகள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் கலால் துறை விதிகளின்படி, புதிய மதுபான கடை உரிமையாளர் கடையின் ஏல தொகையில் 2 சதவீதத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாத பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்