‘அமலுக்கு வரும் புதிய அதிரடி கட்டுப்பாடுகள்..?’ ‘அதிகரித்துவரும் ஏடிஎம் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஏடிஎம் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க விரைவில் பல முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 18 வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஏடிஎம் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளைத் தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் டெல்லி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு மோசடிகளைத் தடுக்க சில நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. அதன்படி ஏடிஎம்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையே பெரும்பாலான குற்றங்கள் நடைபெறுவதால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாமா என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம் 6 முதல் 12 மணி நேரம் வரை காத்திருக்க கட்டுப்பாடு விதிக்கலாமா எனவும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது அவர்களுடைய செல்ஃபோன்களுக்கு ஓடிபி எண்களை அனுப்பவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. கனரா வங்கியில் உள்ள இந்த ஓடிபி நடைமுறை விரைவில் மற்ற வங்கிகளுக்கும் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் புதிய கட்டுப்பாடுகள்  நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

BANKS, ATM, TRANSACTIONS, CASH, RESTRICTIONS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்