"முதல் கல்யாணத்தால வாழ்க்கையே போச்சு".. துவண்டு போன தாய்க்கு மலர்ந்த காதல்.. முன்னின்று திருமணம் நடத்திய மகள்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒருவரது வாழ்க்கை என்பது எப்போதுமே நினைத்தது போல முன்னேறி சென்று விடாது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கும்.
அப்படி தான், அசாம் மாநிலத்தை சேர்ந்த நிர்மலி என்ற பெண்ணின் வாழ்க்கையும் இருந்துள்ளது. நிர்மலியின் முதல் திருமணம் அவருக்கு சிறந்த ஒன்றாக அமையவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 20 ஆவது வயதில் தனது மகளோடு கணவரின் வீட்டை விட்டும் வெளியேறி உள்ளார் நிர்மலி.
மிகவும் இளம் வயதிலேயே நிர்மலிக்கு இப்படி ஒரு நிலை வந்ததால், அதைக் கடந்து வாழ்வில் முன்னேறுவும் நிர்மலி முடிவு செய்துள்ளார்.
அதன் படி, ஒரு பக்கம் வேலை செய்து கொண்டே மறுபக்கம் அவர் படிக்கவும் ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படியே பல ஆண்டுகள், நிர்மலியின் வாழ்க்கையும் கடந்து விட்டது. அதே போல, நிர்மலிக்கு பைக் ஓட்டுவது என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், பைக்கில் பல இடங்களில் அவர் பயணம் மேற்கொண்டதையும் வழக்கமாக கொண்டு வந்ததாக தெரிகிறது.
அப்படி ஒரு பயணத்தின் போது, வாலிபர் ஒருவரை நிர்மலி சந்தித்துள்ளார். மேலும், அவருடன் நிர்மலிக்கு காதலும் உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருவருக்கு இடையே பின் காதலும் உருவாகி உள்ள நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பி உள்ளனர்.
மறுபக்கம், தனது 20 வயதான மக்களிடம் நிர்மலி தனது திருமணத்திற்கான சம்மதத்தையும் கேட்டுள்ளார். தாயின் இரண்டாவது திருமணத்திற்கு எந்தவித தயக்கமும் இன்றி சம்மதமும் கூறி உள்ளார் நிர்மலியின் மகள். இதன் பின்னர், அவர் காதலித்த வாலிபருடன் நிர்மலியின் மகள் முன்பு வைத்தே திருமணம் நிகழ்ந்துள்ளது.
தனது தாயின் திருமணத்தில் மகள் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. தாய்க்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மகளை பலரும் பாராட்டியும் வருகின்றனர். அதே வேளையில், இத்தனை துயர்கள் கடந்து தனக்கு பிடித்தது போல வாழ்க்கையை மாற்றி உள்ள நிர்மலியின் திறனையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தன்னோட குழந்தைக்காக அம்மா என்னவேனா செய்வாங்க.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!
- சாப்பிட சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மகள்.. 10வது படித்த 'கூலி தொழிலாளர்' தந்தையின் அசாத்திய கண்டுபிடிப்பு.!! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
- "சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மனுஷன், திடீர்ன்னு".. வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை.. CCTV பார்த்து கதறிய தமிழக குடும்பம்.. கண்ணீர் மல்க கோரிக்கை!!
- மகனின் கருவை சுமக்கும் தாய்.. இப்படி ஒரு முடிவுக்கு என்ன காரணம்.? நெகிழ்ச்சி பின்னணி..!!
- "இது தான் அப்பா, பொண்ணு Goals போல".. ஒரே நாளில் மகளுடன் வழக்கறிஞராக பதிவு செய்த தந்தை.. நெகிழ வைத்த பின்னணி!!
- நைட்ல காதலியை பார்க்கப்போன இளைஞர்.. மறைஞ்சு நின்ன இளம்பெண்ணின் அம்மா.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!
- "எப்படி நடந்துச்சு'ன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல".. திறக்கப்படாத வீட்டுக்குள் இருந்த தாய், மகன்.. பல மாசமா தொடரும் மர்மம்!!..
- அம்மா மாதிரி இருக்கு.. கோவையில் பஸ் பின்னாடியே ஓடுன குட்டிக்குதிரை.. கண்கலங்க வெச்ச சம்பவம்..
- Video : விமானத்தில் ஏறிய சிறுவன்.. மறுகணமே கட்டியணைத்து கொண்ட விமான பணிப்பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!
- "சாகுறதுக்கு முன்னாடி ஒருதடவை அவனை பார்த்துடனும்னு நெனச்சேன்".. ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன்.. 25 வருஷத்துக்கு அப்பறம் நடந்த அதிசயம்..!