பிளாஸ்டிக் பைக்குள் வைத்து வீசப்பட்ட கணவன் & மாமியார் உடல் பாகங்கள்.. நண்பர்கள் உடந்தையுடன் இளம்பெண் செய்த நடுங்கவைக்கும் சம்பவம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் இளம் பெண் ஷ்ரத்தா தன்னுடைய காதலன் அப்தாப் என்பவரால் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் பாகங்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தா கிளம்பிட்டாங்க.. ஊருக்கு திரும்பிய அடுத்த ஆஸ்திரேலிய வீரர்.. முழு விபரம்.!

இதனை தொடர்ந்து தற்போது அசாமில் நடந்திருக்கும் சம்பவம் பலரையும் நடுநடுங்க வைத்திருக்கிறது. இது தொடர்பான இந்த சம்பவத்தில் கணவன் மற்றும் மாமியாரை கொன்று உடல் பாகங்களை வீசி இருக்கிறார் பெண் ஒருவர். கௌகாத்தி அருகே வந்தனா கலிதா (Bandana Kalita) என்கிற இளம் பெண் கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய கணவரையும் மாமியாரையும் காணவில்லை என்று போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர்.

ஆனால் விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை. அதேசமயம் வந்தனாவிடம் எந்த கவலையும் இல்லாதது குறித்து சந்தேகம் அடைந்த உறவினர்கள், போலீசாரிடம் தகவல் தெரிவிக்க அதன் பிறகுதான் வந்தனா மீது போலீசார் தங்களுடைய சந்தேக பார்வையை திருப்பி இருக்கின்றனர். அப்போதுதான் போலீசாரை திசை திருப்புவதற்காக வந்தனா இப்படி தன்னுடைய கணவரையும் மாமியாரையும் காணவில்லை என்று புகார் கொடுத்திருப்பதாக போலீசார் யூகித்தனர்.

இந்த யூகத்தின் அடிப்படையில் வந்தனாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்தனர். அப்போது ஒவ்வொரு உண்மையாக வந்தனா சொல்லியிருக்கிறார். அந்த உண்மைகள் நாட்டையே அதிர செய்திருக்கின்றன. ஆம் கணவர் அமர ஜோதி டே மற்றும் மாமியார் சங்கரி டே ஆகியோரைக் கொன்ற ஜிம் டிரெய்னர் வந்தனா, தமது ஆண் நண்பர்கள் உதவியுடன் கொல்லப்பட்ட அந்த உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் வைத்து கௌகாத்தியிலிருந்து மேகாலயா, சிரபுஞ்சி வரை கொண்டு சென்று வீசியதாக வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Also Read | முடிவுக்கு வந்த காத்திருப்பு.. இனி இவரு தான் கேப்டன்.. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி அறிவிப்பு..!

ASSAM, BANDANA KALITA, AMARJYOTI DEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்