'கர்ப்பமான 10 மாசத்தில் பிரசவம் நடக்குமே'... 'பதைபதைப்பில் இருந்த கணவர்'... 'சிசேரியன்' முடிந்ததும் குழந்தையை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போன மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாகக் கர்ப்பம் தரித்து 38 முதல் 42 வாரங்கள் வரையிலான காலங்களில் பெண்களைப் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்.

மனித இனத்தின் சில அபூர்வமான மாற்றங்களையும், எதிர்பாராத நிகழ்வுகளையும் யாராலும் கணிக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா. அவரது கணவர் படல்தாஸ். இந்நிலையில் 27 வயதான ஜெயா கர்ப்பமாக இருந்துள்ளார். ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிரசவ நேரத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயங்கியுள்ளனர். பின்னர் வேறுவழியின்றி ஜெயாவை ஜூன் 15 ஆம் தேதி சதிந்திரா மோகன் தேவ் அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் படல் அழைத்துச் சென்றுள்ளார்.

பொதுவாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கர்ப்பம் தரித்து 38 முதல் 42 வாரங்கள் வரையிலான காலங்களில் மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் ஜெயாவிற்குச் சற்று தாமதமானதால் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதையடுத்து மருத்துவர்கள் ஜெயாவைப் பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு நார்மல் டெலிவரி சாத்தியமில்லை என்பது தெரிய வந்தது.

இதனால் டாக்டர் ஹனிஃப் உள்ளிட்ட சீனியர் டாக்டர்கள் மேற்பார்வையில் சிசேரியன் முறையில் ஜெயாவிற்குப் பிரசவம் நடைபெற்றது. அப்போது நர்ஸ் ரோஸ்லின் மஞ்சருல், ஆனஸ்திஸியா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ராஜட் டெப் ஆகியோர் இணைந்து ஜெயாவிற்குப் பிரசவம் பார்த்துள்ளனர். மருத்துவர்களின் சீரிய முயற்சியால் ஜெயா, குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்துள்ளார்.

ஆனால் பிறந்த குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். காரணம் பிறந்த குழந்தையானது 5.2 கிலோ கிராம் எடை இருந்துள்ளது. பொதுவாகப் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோ கிராம் எடை இருக்கும். சில நேரங்களில் 4 கிலோ கிராம் வரை எடை இருந்திருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை ஒன்று 5.2 கிலோ கிராம் வரை எடை இருப்பது இதுவே முதன் முறை.

ஜெயாவிற்கு இது இரண்டாவது குழந்தை. மேலும் அவருக்குப் பிறந்த முதல் குழந்தையும் 3.8 கிலோ கிராம் எடை இருந்துள்ளது. ஜெயாவும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்து வரத் தாமதமானதால் பயந்துபோன அவரது கணவர் படலுக்கு மருத்துவர்களின் வார்த்தை மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இதனிடையே இந்த நிகழ்வு ஒரு அரிதான விஷயம் சொல்லப்போனால் ஒரு புதிய சாதனை என சீனியர் மருத்துவர் லஸ்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்