என்னங்க சொல்றீங்க? ஒரு கிலோ தேயிலை 99,999 ரூபாயா! அப்படி அதுல என்ன இருக்கு?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாம்: அசாமில் ஒரு கிலோ தேயிலை சுமார் 99,999 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தேயிலை ஏலம்:

அசாமில் இருக்கும் கவுகாத்தி தேயிலை ஏல மையம் (GTAC) உலகின் பரபரப்பான தேயிலை வர்த்தக நிலையங்களில் பிரபலமானது. கவுகாத்தியில் அமைந்துள்ள தேயிலை ஏல மையத்தின் முதன்மை ஏலப் பொருள் அசாம் தேயிலை தான். இந்தத் தேயிலை ஏல நிறுவனம் 1970-ல் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று தேயிலை ஏலம் நடைபெற்றது.

அப்போது அங்கு 1 கிலோ தேயிலைத்தூள் சுமார் 99,999 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. என்னடா இது ஒரு கிலோ சுமார் ஒரு லட்சம் வரை போகிறதா என்ற அதிர்ச்சி அனைவருக்கும் ஏற்படுவது தான்.

சிறப்பு கைவினை:

ஏன் இந்த தேயிலைக்கு மட்டும் இவ்வளவு மவுசு என இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். அசாமின் திப்ரூகர் மாவட்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட நஹோர்ச்சுக்பரி 'கோல்டன் பேர்ல்' (Golden Pearl) என்ற தேயிலைதான், இந்தளவுக்கு விலை போயுள்ளது. ஏனென்றால், இந்த தேயிலை இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே அரைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு கைவினைத் தேயிலையாம்.

தனித்துவமான சுவை:

அதனாலேயே இந்த இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் அசாம் மாநிலம், உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி செய்யும் பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவின் இந்தப் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருக்கும். பருவமழைக் காலங்களில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 250 மி.மீ முதல் 300 மி.மீ வரை இங்கு மழை பொழியும். பகல் நேரத்தின்போது இப்பகுதியின் வெப்பநிலை சுமார் 36°C (96.8°F) வரை உயரும். இந்த காலநிலை அசாம் தேயிலைக்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது.

இதன் காரணமாகவே அசாமில் விளையும் தேயிலைத் தூளுக்கு, சர்வதேச அளவில் புகழ் இருக்கிறது. நேற்று ஏலத்தில் கிடைத்துள்ள விலையானது, நம் நாட்டில் விற்கப்பட்ட தேயிலைக்கு கிடைத்த அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.

TEA, ASSAM, தேயிலை, ஏலம், அசாம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்