தாஜ்மஹால் சர்ச்சை.. பூட்டிய அறைகளின் படங்களை முதல்முறை வெளியிட்ட தொல்லியல் துறை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தாஜ்மஹாலின் நிலத்தடி அறைகளின் படங்களை தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மூடிய 22 அறைகள் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பாஜகவின் ரஜ்னிஷ் குமார் என்பவர் பொதுநல வழக்கை தொடுத்திருந்தார். அதில் தாஜ்மஹாலில் உள்ள 20 அறைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அங்கு இந்து சிலைகள், புனித நூல்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறியவும், குழு அமைக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் இந்திய தொல்லியல் துறை (ASI) தாஜ்மஹாலின் சில அறைகளின் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த மூடிய அறைகளில் பூச்சு மற்றும் சுண்ணாம்பு அலமாரி உட்பட விரிவான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணிக்கு 6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த தொல்லியல் துறை ஆக்ரா பிரிவின் தலைவர் ஆர்.கே.படேல், தொல்லியல் துறை இணையதளத்தில் தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். மேலும் வார இறுதி நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளதாக ஆர்.கே.படேல் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்:
http://behindwoods.com/bgm8

TAJ MAHAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்