'திரிஷ்யம் 2' பார்த்து பிரம்மித்து போய்... 'கிரிக்கெட்' வீரர் போட்ட 'ட்வீட்'!... பதிலுக்கு 'சர்ப்ரைஸ்' ரிப்ளை கொடுத்த 'மோகன்லால்'... 'செம' வைரல்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமேசான் ப்ரைம் வீடியோவில் சில தினங்களுக்கு முன், மலையாள நடிகர் மோகன்லால் நடித்த 'திரிஷ்யம் 2' திரைப்படம்  வெளியாகியிருந்த நிலையில், தற்போது வரை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

பல பிரபலங்கள் திரிஷ்யம் 2 திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போய் பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

அதில், 'மோகன்லால் நீதிமன்ற காட்சியில் கொடுக்கும் ட்விஸ்ட்டை பார்த்து நான் சத்தமாக சிரித்து விட்டேன். நீங்கள் பார்க்க விரும்பினால் முதல் பாகத்தில் இருந்து மீண்டும் பார்க்கவும். மிகவும் அற்புதமான படைப்பு' என திரிஷ்யம் 2 படம், தன்னை மிகவும் கவர்ந்துள்ளதை, தனது டீவீட்டில் அஸ்வின் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அஸ்வினின் பதிவைப் பகிர்ந்த மோகன்லால், 'மிகவும் பரபரப்பான ஒரு சூழ்நிலையிலும், எங்களின் 'திரிஷ்யம் 2' திரைப்படத்தை பார்த்து விட்டு, அது பற்றி பேசவும் செய்ததற்கு நன்றி. இது எங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய ஒரு விஷயமாகும். உங்களின் கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துக்கள்' என மோகன்லால் தெரிவித்துள்ளார்.



 

நடிகர் மோகன்லாலின் 'ரிப்ளை'யை சற்றும் எதிர்பார்க்காத அஸ்வின், அதனை பகிர்ந்து 'லாலேட்டன்' என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவும் தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்