ராணுவ வீரர் 'இறந்து' போனதாக துக்கத்தில் மூழ்கிய குடும்பம்... 'கடைசியாக' வந்த போன் காலில்... கிடைத்த வேற லெவல் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇறந்து போனதாக நினைத்த ராணுவ வீரர் உயிருடன் இருக்கும் செய்தி அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கல்வானில் நடைபெற்ற எல்லைத்தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இது நாடு முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து இரண்டு நாடுகளும் தங்களது வீரர்களை எல்லையில் இருந்து விலக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் ராணுவத்தாக்குதலில் இறந்து போனதாக கருதப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் அவரது வீட்டிற்கு தொலைபேசி செய்து தான் உயிருடன் இருப்பதை தெரிவித்து இருக்கிறார். பீஹார் மாநிலம் சரண் மாவட்டம் திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுனில் குமார்.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதலில் இவரும் இறந்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் வேறு ஒரு ராணுவ வீரருக்கு பதிலாக தவறுதலாக இவரது பெயர் இடம்பெற்று விட்டது. இது தெரியாமல் அவரது மனைவி, குழந்தை, உறவினர்கள் என மொத்த கிராமத்தினரும் துக்கத்தில் மூழ்கினர்.
இதற்கிடையில் தான் சுனில் தொலைபேசியில் தான் உயிருடன் இருக்கும் விவரத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை ராணுவப்பிரிவு சுனிலின் சகோதரர் அணிலுக்கு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுனிலின் மனைவி மேனகா, '' சுனிலின் குரல் மறுபுறம் கேட்டது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரது குரலைக் கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய வீரர்களை தாக்க ‘முன்கூட்டியே’ கொண்டு வரப்பட்ட ‘முள்கம்பி’.. வெளிச்சத்துக்கு வந்த சீனாவின் ‘சதித்திட்டம்’!
- ‘கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை’.. ‘வீரமரணம்’ அடைந்த கணவர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- Video: மகன் இறந்துட்டான்... 'என்னோட' 2 பேரன்களை அனுப்புவேன்... கண்கலங்க வைத்த தந்தை!
- 'நாங்களும் பலத்தைக் காட்டுவோம்'...'எங்களுக்கு அமைதி தான் முக்கியம்'... ஆனா நாட்டு மக்களுக்குப் பிரதமர் சொன்ன உறுதி!
- 'என்னங்க, பேசும் போதெல்லாம் இத தானே சொல்லுவீங்க'... 'வீர மகனின் மனசுல இருந்த ஆசை'... தொண்டை அடைக்க கதறி அழுத மனைவி!
- ‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!
- இந்திய சீன எல்லையில் வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்!.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்!'.. யார் இந்த 'பழனி?'
- இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மரணம்!.. எல்லாத்தையும் பண்ணிட்டு சீனா சொன்ன பதில் தான் 'ஆணவத்தின் உச்சம்!'
- 12 சென்ட் நிலத்துக்காக... உறவினர்கள் வெறிச்செயல்!.. சிதைந்து போன குடும்பம்!