'ஜெயில்'ல இருந்து 'ரிலீஸ்' ஆன உடனே மொத வேலையா 'அந்த விஷயத்த' பண்ண போறேன்...! - ஆர்யன் கான் உருக்கம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விசாரணையில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் செய்ய போகும் காரியத்தைக் குறித்து பேசியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்யன் கான் மும்பையின் பலத்த பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல முறை ஜாமின் விண்ணப்பித்தும் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.

இதையடுத்து, நடிகர் சல்மான்கானை சிறையில் இருந்து வெளியில் எடுத்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆர்யனுக்காக வாதாட களமிறங்கிய நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 20-ஆம் தேதியன்று எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என ஷாருக்கான் அவரின் மனைவி கௌரி மற்றும் ஆர்யானும் நம்பிக்கையோடு உள்ளனர்.

ஆர்யன் கான் சிறை உணவு பிடிக்காமல் கேன்டீனில் கிடைக்கும் பிஸ்கட் மற்றும் தண்ணீரை அறிந்து நாட்களை ஓட்டிவருவதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி ஷாருக்கான் குடும்பம், தன் மகனுக்கு சிறையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட ரூ.4,500 கொடுத்தாதகவும் சிறை அதிகாரிகள் கூறினர்.

அதோடு, கொரோனா பரவல் காரணமாக சிறையில் இருக்கும் கைதிகள் தங்கள் உறவினரோடு சில நிமிடம் வீடியோ காலில் பேசலாம் என்ற நீதிமன்ற உத்தரவையும் ஷாருக்கான் குடும்பம் உபயோகப்படுத்தி சில நாட்களுக்கு முன் சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடியோ காலில் பேசியுள்ளனர்.

இந்நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே ஆர்யன் கானிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின் போது ஆர்யன் கான் சமீர் வான்கடேவிடம் தான் விடுதலையான பிறகு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவப்போவதாக தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அதோடு, இனி என் பெற்றோர் பெயர் கெடும் வகையில் எந்த செயலையும் செய்ய மாட்டேன். அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஏழை, அடித்தட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக எதையாவது செய்வேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்