2000 பேருடன் கிளம்பிய கப்பலில் தீயாய் பரவும் கொரோனா - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கொர்டேலியா க்ரூஸ் கப்பல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல கொர்டேலியா க்ரூஸ் என்னும் சொகுசுக்கப்பல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆம். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியபோதும் இந்தக் கப்பலில் தான் பார்ட்டி நடைபெற்றது என போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அறிவித்திருந்தது.

Advertising
>
Advertising

இப்போது என்ன சிக்கல்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 2000 பேருடன் கோவா நோக்கிச் சென்ற இந்தக் கப்பலில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருக்கிறது. இதனால் கோவாவில் கப்பலை நிலைநிறுத்த கோவா அரசாங்கம் அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
இருப்பினும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒருவழியாக 2000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்து, அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்தால் மட்டுமே பயணிகளை கோவாவிற்குள் அனுமதிக்க முடியும் என கோவா அரசு தெரிவித்திருந்தது.

கொரோனா பாசிட்டிவ்

ஜனவரி 2 ஆம் தேதி கப்பலில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவில் 66 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் பயணிகளை கோவாவிற்குள் நுழைய அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகள் விரைவில் முடிவெடுப்பார்கள் என கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்திருந்தார்.

வச்ச நம்பிக்கை எல்லாம் வீணா போச்சு.. டிரெண்டாகும் ‘புது’ வார்த்தை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!


அதற்கிடையில் கொரோனா மற்ற பயணிகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கப்பலில் பயணித்த இப்பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மும்பைக்கு

கோவா அரசின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு கப்பலை மீண்டும் மும்பைக்கு செலுத்த இருப்பதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பாசிடிவ் ஆன நபர்கள் கப்பலை விட்டு கீழே இறங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவத்தில் அதிரடி ‘திருப்பம்’.. வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!

ARYAN KHAN, CORDELIA CRUISE SHIP, GOA, TESTED POSITIVE, COVID-19

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்