‘விரைவில் இலவச வைஃபை’... ‘15 ஜிபி ஃப்ரீ டேட்டா’... ‘கலக்கும் மாநில அரசு’!
முகப்பு > செய்திகள் > இந்தியா3 முதல் 4 மாதங்களுக்குள் டெல்லியில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிகளில், டெல்லியில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்குள் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் இதற்கான பணிகள், தற்போது நடைபெற்று வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அதன்படி டெல்லி முழுதுவம் முதற்கட்டமாக 11 ஆயிரம் இடங்களில் ஹாட் ஸ்பாட் வசதி வைக்கப்பட உள்ளது. அதில் 4,000 ஹாட் ஸ்பாட்கள் பேருந்து நிலையத்திலும், மீதி 7,000 ஹாட் ஸ்பாட்கள் சட்டப்பேரைவைத் தொகுதிகளில் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் மாதம் 15 ஜிபி இலவச டேட்டா, 200 எம்பிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தோடு முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஓடும் ரயிலில் ‘பெண் கைதிக்கு’ நடந்த கொடூரம்.. ‘காவலர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- ‘குடித்துவிட்டு கால் டாக்சியை இயக்கிய டிரைவர்'... 'காருக்குள்ளேயே மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’!
- அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து..! குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..!
- ‘ஓடும் ரயிலில் மகன் கண்முன்னே’.. ‘தாய்க்கும், மகளுக்கும் நடந்த..’ பதைபதைக்க வைக்கும் சம்பவம்..
- பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது.. ‘துப்பாக்கி முனையில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’
- 'இதெல்லாம் மெட்ரோவில் பண்ற காரியமா?'.. 'இப்ப என்ன ஆச்சு?'.. இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!
- 'என் மனைவியோட கள்ளக்காதலன'.. 'சுட்டீன்னா.. இதான் கிஃப்ட்'.. இப்படி ஒரு டீலிங்கா? வைரல் சம்பவம்!
- '4 வயது மகளை, மாடிக்கு அழைச்சுட்டு போனார்.. அப்ப திடீர்னு..' மனைவியின் பகீர் வாக்குமூலம்!
- டெல்லி சென்ற விமானத்தில் நடுவானில்.. ‘6 மாத குழந்தைக்கு நடந்த பரிதாபம்..’
- டெல்லி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்; பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்..